மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

கமல் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

கமல் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். நேற்று (மார்ச் 22) நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவர் பிரச்சாரத்துக்குச் சென்றார்.

கீழ்வேளூர், நாகப்பட்டினம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் ம.நீ.ம. வேட்பாளர்களை ஆதரித்து நாகையில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், அங்கிருந்து தஞ்சை சென்றார். நேற்று மாலை தஞ்சை ரயிலடியில் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு காரில் திருச்சி நோக்கிக் கிளம்பினார்.

அப்போது தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது கமல்ஹாசன் காரை தேர்தல் பறக்கும் படையினர் மறித்தனர்.

50,000 ரூபாய்க்கு அதிகமான கணக்கில் வராத பணம் கொண்டு செல்லப்பட்டால் அதைக் கைப்பற்ற பறக்கும் படையினருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த நிலையில் கமலின் பிரச்சார வாகனத்துக்குள் துணை ராணுவப்படையினர், போலீஸார் ஏறி சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை முடிந்து சில நிமிடங்களில் அவர்கள் கமலின் காரைவிட்டு இறங்கினார்கள்.

சில நாட்களுக்கு முன் கமல் கட்சியின் மாநிலப் பொருளாளர் சந்திரசேகரின் திருப்பூர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி 11.5 கோடி ரூபாயைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில் கமலின் பிரச்சார வாகனத்திலும் பறக்கும் படை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

“நம்மவரின் காரில் சோதனை நடத்தப்பட்டதில் ஒன்றும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், இதேபோல் எல்லா தலைவர்களின் வாகனங்களையும் சோதிக்க வேண்டும்” என்கிறார்கள் மக்கள் நீதி மய்யக் கட்சியினர்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

செவ்வாய் 23 மா 2021