மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

சிஏஏவை அனுமதிக்கமாட்டோம்: ஸ்டாலின்

சிஏஏவை அனுமதிக்கமாட்டோம்: ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று காலை தூத்துக்குடி, பிறகு ராமநாதபுரம் மற்றும் இரவில் ராயபுரம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

ராயபுரம், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர் தொகுதிகளில் மக்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியபோது திமுக சார்பில் ஆதரவு கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த சட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுபோன்று, கேரளா, மேற்கு வங்காளத்தில் இந்த சட்டத்தை அனுமதிக்காதது போல் திமுக ஆட்சியில் இந்த சட்டத்தை அனுமதிக்கப்பட்டோம்.

வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடந்த போது மக்களை வந்து சந்தித்திருப்பாரா ராயபுரம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார். நாடாளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தற்போது தேர்தலுக்காக இங்கு வந்து பாட்டுப் பாடி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர், அமைச்சர்கள் பற்றிய ஊழல்களைப் பட்டியலிட்டு ஆளுநரிடம் மனு கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று தெரியும். ஆனால் மரபுக்காகக் கொடுத்தோம். திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கப்படும். மீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார், கொரோனா காலத்தில் மீனவர்கள் பாதிக்கப்பட்ட போது எதாவது உதவி செய்தாரா? . இத்தொகுதியில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அமைச்சர் ஜெயக்குமாரால் ராயபுரம் தொகுதி வளர்ச்சி அடைந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “எடப்பாடி பழனிசாமி பேசுவது சிரிப்பாக இருக்கிறது. அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார். உழைத்து, உழைத்து முன்னேற்றத்துக்கு வந்தவர் என்று சொல்கிறார். ஆனால் அவர் ஊர்ந்து போய் பதவி வாங்கியதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். ஸ்டாலின் உழைக்காமலேயே முன்னுக்கு வந்தவர் என்று சொல்கிறார்? அவர் என்னுடைய உழைப்பு பற்றிப் பேசுவதா?

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து உழைத்த கலைஞரே, மு.க.ஸ்டாலினிடம் எனக்கு பிடித்தது, ‘உழைப்பு... உழைப்பு...உழைப்பு...’ என்று சொல்லியிருக்கிறார். அவர் கொடுத்த இந்த உழைப்பு பதவி ஜனாதிபதி பதவியை விட பெரிய பதவி. எடப்பாடி பழனிசாமி என்று சொன்னாலே, கரெப்ஷன், கலெக்‌ஷன், கமிஷன், கொடநாடு கொலை, கொள்ளை, சாத்தான்குளம் நிகழ்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு , நீட் தற்கொலைகள் , ஜெயலலிதா, சசிகலாவுக்குச் செய்த துரோகம் ஆகியவை தான் நினைவுக்கு வருகிறது என்று கடுமையாக விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 23 மா 2021