மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

விவசாயத்திற்கு தனி பட்ஜெட், பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம்: பாஜக வாக்குறுதி!

விவசாயத்திற்கு தனி பட்ஜெட், பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம்: பாஜக வாக்குறுதி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான, பாஜக தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 22) வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்,

50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவோம்.

தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடமே வழங்கப்படும்.

மதச் சார்பற்ற அரசு, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி இந்துக் கோவில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும்.

18 முதல் 23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்

8 - 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இலவசமாக டேப்லெட் வழங்கப்படும்

விவசாயத்திற்கு அதிக நிதி ஒதுக்கீட்டுடன் தனி பட்ஜெட்.

ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே வந்து விநியோகிக்கப்படும்.

மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான அரசு பல்நோக்கு மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும், நிறுவப்பட்டு, அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 22 மா 2021