மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

அமமுகவினர் என்னை கொல்ல முயல்கின்றனர் :கடம்பூர் ராஜு

அமமுகவினர் என்னை கொல்ல முயல்கின்றனர் :கடம்பூர் ராஜு

தோல்வியின் பயத்தினால் அமமுகவினர் என்னை கொல்ல முயல்கின்றனர்  என்று அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகின்றனர். இரு கட்சியினரிடையே போட்டி பிரச்சாரம் நடந்து வரும் நிலையில்  கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், “ நேற்றிரவு அதிமுக, அமமுக இருதரப்பினரும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காவல்துறை கேட்டுக் கொண்டதால் நான் என்னுடைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, என்னுடன் வந்த வாகனங்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு தனியாக காரில் சென்றேன்.

ஆனால் அமமுகவினர் என்னுடைய காரை வழிமறித்தனர். அதையெல்லாம் கடந்து நான் வந்தேன். பின்னர் அவர்கள், தயாராக வைத்திருந்த வெடியை அமமுகவினர் என் கார் மீது வீசி எறிந்தனர்.

வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை இருந்தது. என்னுடைய கார் டிரைவர் மீதும், என்மீதும் தீப்பொறி விழுந்து காயங்கள் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகப் பொறுமையைக் கடைப்பிடித்து வந்தோம். அமமுகவின் அராஜக செயல் மக்களுக்குத் தெரியும், மக்கள் முடிவெடுப்பார்கள். என்னுடைய கார் டிரைவர் லாவகமாகக் காரை ஓட்டவில்லை என்றால் கார் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இதைக்கண்டு நான் அஞ்சப்போவதில்லை. தேர்தல் பணிக்கு வரும் போதே இப்படி அராஜகம் செய்கிறார்கள் என்றால், நாளை தொகுதிக்கு பணிக்கு வரும் போது  நிலைமை எப்படி இருக்கும் என்பதை மக்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். என்னுடைய தேர்தல் பணியைத் தடுப்பதற்காகக் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். ஏனெனில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தோல்வியின் பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அவர்கள் இறங்கியுள்ளனர். எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இப்பிரச்சினை தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

-சக்தி பரமசிவன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 22 மா 2021