மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

தமிழகம் மீது மோடிக்கு கோபம் : உதயநிதி

தமிழகம் மீது மோடிக்கு கோபம் : உதயநிதி

மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ”தமிழகத்தின் மேல் பிரதமர் மோடி கோபத்தில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டி வருகிறது. அந்த வகையில் மதுரையில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு அமோக வெற்றியை கொடுத்தீர்கள். அதனால் தமிழகத்தின் மீது மோடி கோபத்தில் இருக்கிறார்.

ஜிஎஸ்டி வரியை தர மறுக்கிறார். நிதி நெருக்கடி என காரணம் சொல்கிறார். ஆனால் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விமானம் வாங்கியிருக்கிறார். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக 45,000 கோடி ரூபாய் கேட்டோம். ஆனால் வெறும் 1000 கோடி தான் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. அதிலும் தற்போது தேர்தல் வரும் சமயத்தில் 500 கோடியைக் கொடுத்துள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பழிப்பு நடவடிக்கையை எடுத்தார். அப்போது புதிய இந்தியா உருவாகும் என்று தெரிவித்தார். அது நடந்ததா? , புதிய இந்தியாவை யாராவது பார்த்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ”நீட் தேர்வால் 14 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்ட உதயநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும். அதிமுகவும் நீட் வேண்டாம் என்று தான் சொல்கிறது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக நீட் தேர்வை நடத்துவதோடு, உயர்க் கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்” என்று அறிவித்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவரது மறைவு குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் நவீனத் தொழில்நுட்பத்துடன் இயங்கக் கூடிய அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிப்பக்கபட்டிருந்த நாட்களில் சிசிடிவி வேலை செய்யவில்லை என்கிறார்கள். இதை எல்லாம் நம்ப முடிகிறதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, குடிநீர் பிரச்சினை, பாதாளச் சாக்கடை பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகளும் திமுக ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கப்படும் என்று கூறி திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

-பிரியா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

திங்கள் 22 மா 2021