மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

கொரோனா இரண்டாம் அலை: பிரச்சாரத்தில் கட்டுப்பாடுகள்!

கொரோனா இரண்டாம் அலை:  பிரச்சாரத்தில்  கட்டுப்பாடுகள்!

ஆட்சிக்கு எதிர்ப்பு அலை இருக்கிறதா? எதிர்க்கட்சிக்கு ஆதரவு அலை இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை என்ற அச்சம் தமிழகத்தை படர்ந்துள்ளது.

தேர்தல் காலம் என்பதால் எங்கெங்கு பார்த்தாலும் பிரச்சாரம், மக்கள் கூட்டம் என்று கொரோனா மீண்டும் பரவ சாத்தியக் கூறுகளும் அதிகமாக இருக்கின்றன.

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேளச்சேரி சந்தோஷ்பாபு, அண்ணாநகர் பொன்ராஜ் ஆகியோருக்கும் தேமுதிகவின் சேலம் மேற்கு வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இதுவரை எத்தனை எத்தனை நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறார்கள், வீதி வீதியாக சென்று எத்தனை மக்களோடு கைகுலுக்கியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நினைத்தால் கொரோனா தொற்றின் அபாயம் அச்சமூட்டுகிறது.

ஏற்கனவே தனது பிரச்சாரத்தில் மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இன்று (மார்ச் 22) ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வெற்றி இலக்கை நோக்கிய நமது பயணம் மனநிறைவைத் தரும் அதே வேளையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் வரை ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, கடந்த சில வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக கடந்த சில தினங்களாக அதிவேகத்தில் பரவும் கொரோனா, இரண்டாம் அலையாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த அபாயகரமான சூழலில் கழகத் தோழர்கள் நாமும் விழிப்புணர்வோடும் போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையோடும் இருக்க வேண்டியது அவசியம்.

மக்களிடம் பிரச்சாரம் செய்ய செல்லும்போதும் நான் உள்ளிட்ட கழக முன்னணியினர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வரும்போதும் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முக்கியமாக நான் பிரச்சாரம் களத்துக்கு வரும் போது எனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த பொது மக்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பது அவசியம் என்றாலும் கொரோனா பேரிடர் நம்மை விட்டு முழுமையாக நீங்காத நிலையில் இன்னும் சொல்லப்போனால் இரண்டாவது அலையாக நம்மை நெருங்கும் ஆபத்து உள்ள சூழலில் மிகுந்த விழிப்புணர்வோடு பாதுகாப்போடும் தேர்தல் களத்தை அணுகவேண்டும். தனிமனித பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

திங்கள் 22 மா 2021