மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

பிரச்சாரம்: தமிழகத்துக்கு ராகுல் வருவாரா?

பிரச்சாரம்: தமிழகத்துக்கு  ராகுல் வருவாரா?

சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்று உறுதி செய்யப்படாத நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி தீவிர சுற்றுப் பயணம் செய்தார்.

கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், கோவை என்று மக்களுடன் களமிறங்கி...பல உரையாடல்களை நிகழ்த்தி காங்கிரஸுக்கு வாக்கு வேட்டையாடினார் ராகுல் காந்தி. தமிழக சுற்றுப் பயணத்தின் போது கரூர் அரவக்குறிச்சியில் அவர் காளான் பிரியாணி சமைத்த நிகழ்வின் வீடியோ பதிவு இந்தியா முழுதும் வைரலானது.

காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள் என உறுதியாகாத நிலையில் தமிழகத்துக்கு வந்து சென்ற ராகுல் காந்தி, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் என்பதில் அதிருப்தியடைந்ததாக தகவல்கள் வந்தன.

திமுக பேச்சுவார்த்தைக் குழுவினருடன் பேசிய காங்கிரஸ் குழுவினர் ராகுல் காந்தியிடம் திமுக தர முன் வந்த தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி கூறியபோது, “இதற்காகவா இத்தனை முறை நான் தமிழகம் வந்தேன்?” என்று கோபமாகக் கேட்டிருக்கிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள்தான் என்று முடிவு செய்யப்பட்டதில் ராகுல் காந்திக்கு துளியும் விருப்பமில்லை. சிதம்பரம், மாணிக் தாகூர் போன்றோரின் வற்புறுத்தலால்தான் இந்த முடிவு எட்டப்பட்டது. இன்றுவரை ராகுல் காந்தி தமிழகத்துக்கு எப்போது பிரச்சாரத்துக்கு வருகிறார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வருமாறு ராகுல் காந்திக்கு விருதுநகர் எம்.பி,யும் கட்சியின் அகில இந்தியச் செயலாளருமான மாணிக் தாகூர் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதற்கும் ஒரு காரணம் உள்ளது. மாணிக் தாகூரின் மாமனார் ரவிச்சந்திரன் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மேலும் ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ், சிவகாசி அசோகன் ஆகியோர் மாணிக் தாகூரின் பரிந்துரையால் சீட் பெற்றவர்கள். தன் மாமனாரையும் ஆதரவாளர்களையும் கரையேற்ற ராகுல் காந்தியின் பிரச்சாரம் உதவும் என்ற கணக்கையும் சேர்த்துப் போட்டுத்தான் மாணிக் தாகூர் பிரச்சாரத்துக்கு வருமாறு ராகுல் காந்தியை அழைத்திருக்கிறார். ஆனால் அதற்கு ராகுல் காந்தி சாதகமான பதில் ஏதும் சொல்லவில்லை.

41 இடங்களுக்குக் குறைவான இடங்களில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கு சம்மதித்தது ராகுல் அரை மனதோடு எடுத்த முடிவுதான்.

அதனால்தான் மாணிக் தாகூர் வேண்டுகோள் வைத்தபோது, ‘தேர்தல் முடிந்ததும் கட்சியைப் பலப்படுத்த களையெடுக்கும் பணியைத் துவங்கப்போகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆக இப்போது வரை ராகுலின் தமிழகப் பயணத்திட்டம் முடிவு செய்யப்படவில்லை. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போன்ற வெளிமாநிலத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வருவது பற்றியும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” என்கிறார்கள்.

-வணங்காமுடிவேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 22 மா 2021