மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

தூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை என்ன ஆனது?: ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு விசாரணை என்ன ஆனது?: ஸ்டாலின்

‘ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் எனக்குத் தெரியாது. டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என கூறிய எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிக்கலாமா?’   என திமுக தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.  அப்போது நடத்தப்பட்ட  துப்பாக்கி சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இன்னும் மாறா வடுவாக மக்கள் மனதில் இருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று (மார்ச் 22)  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின்,   “துப்பாக்கி சூடு சம்பவம் எனக்குத் தெரியாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி பதவியில் தொடரலாமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பேசிய அவர், 13 பேர காக்கை குருவிகள் போன்று சுட்டுத் தள்ளினார்கள். அதை நினைத்தால் இன்றும் ரத்த கண்ணீர் வருகிறது. அறவழியில் போராடியவர்களைச் சந்திக்காமல், அன்றைய தினம் ஆட்சியர் எங்கேயோ சென்றுவிட்டார். துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் சென்னையிலிருந்து வந்து, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தேன்.

என்ன தவறு செய்தார்கள் என்பதற்காகத் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.  இப்படிப்பட்ட ஆட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டுமா, வேண்டாமா.  கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொல்லி அதையும் கொடுத்தார்கள். ஆனால் படித்தவர்களுக்குத் தகுதியற்ற வேலைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.  எனவே திமுக ஆட்சிக்கு வரும் போது அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கொடுப்போம்.

தற்போது கண் துண்டைப்பாக நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில், துப்பாக்கி சூடு  குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் மூன்றாண்டு கடந்தும், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை நிலை என்ன ஆனது?” என கேள்வி எழுப்பினார்.

சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசிய முக ஸ்டாலின், “ போலீசார் தாக்கி  ஜெயராஜ் பென்னிக்ஸ் இறக்கவில்லை என எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  முதல்வர் சொல்லியதன் பேரில்  உடல்நலம் பாதிப்பால் இருவரும் இறந்தார்கள் என்று எப்.ஐ.ஆர் பதிவு செய்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இதற்கு இங்குள்ள அமைச்சர், இருவரும் மருத்துவமனையில் தான் இறந்தார்கள் என்று கூறினார். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவும் மருத்துவமனையில் தானே இறந்தார். அதற்கு மட்டும் ஏன் விசாரணை ஆணையம் அமைத்தார்கள்” என்று கேள்வி எழுப்பினார் முக.ஸ்டாலின்.

தொடர்ந்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்குத் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவமும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவமுமே எடுத்துக் காட்டு என்று தெரிவித்த முக.ஸ்டாலின்,  திமுகவின் வாக்குறுதிகளை  எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 22 மா 2021