மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

‘காசு வாங்கிட்டிங்களானு கேக்குறாங்க’: விலகிய மன்சூர் அலிகான்

‘காசு வாங்கிட்டிங்களானு கேக்குறாங்க’:  விலகிய மன்சூர் அலிகான்

எங்கு சென்றாலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று கேட்பதால் தேர்தலில் போட்டியின்றி விலகுவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனு ஏற்கப்பட்டு பரப்புரையும் மேற்கொண்டு வந்தார். வாக்கிங் செல்லுதல், நாயுடன் கலந்துரையாடல், மீன் விற்பனை செய்தல் எனத் தொகுதி மக்களிடம் கலகலப்பு ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தார். அதுபோன்று, இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரித்து, திமுகவுக்கு அந்த வாக்குகள் போகாமல் தடுப்பதற்காகத்தான், மன்சூர் அலிகான் களமிறக்கப்பட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவிப்பு வெளியிட்டார். அவர் வெளியிட்ட ஆடியோவில், நான் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். இப்போது வரை எனக்குச் சங்கடமாக இருக்கிறது. எதாவது ஒரு இடத்தில் தேர்தலில் நிற்கலாம் என தொண்டாமுத்தூர் சென்றேன். சில நண்பர்கள் எனக்கு உதவினார்கள். எனது வேட்புமனு ஏற்கப்பட்டது.

ஆனால் எங்குச் சென்றாலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என்று கேட்கிறார்கள். பாய்களின் வாக்கைப் பிரிப்பதற்காகத் தான் நான் போட்டியிடுவதாக நினைக்கிறார்கள். மீன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு நேற்றும் (மார்ச் 21) பிரச்சாரத்துக்குச் சென்றேன்.

தொண்டாமுத்தூரில் அமைச்சர் வேலுமணிக்கு நல்ல பெயர் இருக்கிறது. அரசியலில் எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. வேறு யாரையும் தேவையில்லாமல் திட்டக்கூடாது. திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட போது கூட ஒரு பைசா வாங்கவில்லை. என் காசை செலவழித்துத்தான் பிரச்சாரம் செய்தேன்.

எனக்கு 3 பெண் பிள்ளைகள் இருக்கிறது. மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாளை நான் கெட்ட பெயருடன் போகக் கூடாது. காவல்துறையினரிடம் எதற்காவது அனுமதி வாங்கச் சென்றால் அதிமுகவினரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்கின்றனர். 10க்கு 8 பேர் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர். சங்கடமாக இருந்தது. தேர்தலே வேண்டாம் என்று சென்னைக்குக் கிளம்பிவிட்டேன். மக்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

சில இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் பிரச்சாரத்துக்கு அழைக்கிறார்கள். எனவே பிரச்சாரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த தேர்தலில் தொண்டாமுத்தூரில் நான் நிற்கவில்லை” என்று கூறியுள்ளார்.

-பிரியா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

திங்கள் 22 மா 2021