மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க மனு!

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்க மனு!

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன. அதில், அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் இலவச வாஷிங் மெஷின், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை, வருடத்திற்கு 6 இலவச சமையல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும் என பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் என்பவர் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று சாத்தியமில்லாத வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அதிமுக தேர்தல் அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

ஞாயிறு 21 மா 2021