மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை: உற்று நோக்கும் அதிமுக‌

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை: உற்று நோக்கும் அதிமுக‌

தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகளில் இருந்து குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் வரை கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன.

இந்நிலையில் தமிழக அரசியலை கலக்கி வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. இன்று (மார்ச் 21) பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுமென்று அக்கட்சித் தலைவர் எல். முருகன் ஏற்கனவே கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு சிறு பங்குதாரர் என்றாலும், பாஜக தனது சொந்த தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது, இது மாநிலத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து பேசும் என்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.

முன்னதாக, பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது, ஆறு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு அரசு வேலை உள்ளிட்ட வாக்காளர்களைக் கவரும் அறிவிப்புகளை வெளியிட்டது.

பாஜக பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி, " அதிமுகவின் அறிக்கை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் பார்வையை விளக்கியுள்ளது ஆனால், கூட்டணியில் ஒரு சிறிய பங்காளியாக இருந்தபோதிலும், பாஜக தமிழகத்திற்கான ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடும்" என்று அவர் கூறினார்.

பாஜக வெளியிடும் தேர்தல் அறிக்கையில், தமிழகத்துக்கு மத்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றி இடம்பெற்றிருக்கும் என்றும் பாஜக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை அதிமுக வற்புறுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால்,பாஜக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் பாஜகவின் கொள்கை அழுத்தமாகக் குறிப்பிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையை மற்றவர்களை விட அதன் கூட்டணிக் கட்சியான அதிமுக உன்னிப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

-வேந்தன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

ஞாயிறு 21 மா 2021