மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

வேட்பு மனு நிராகரிப்பா ? அண்ணாமலை ட்வீட் !

வேட்பு மனு நிராகரிப்பா ? அண்ணாமலை ட்வீட் !

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனு, நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த விளக்கத்துக்குப் பின் ஏற்கப்பட்டது.

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு, வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் ஆண் வேட்பாளர்கள் 6109பேர், பெண் வேட்பாளர்கள் 1055பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேர் என 7,167 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி தொகுதியைப் பொறுத்தவரைச் சுயேச்சையாக 34 பேர் உட்பட மொத்தம் 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது.

அண்ணாமலை தன் மீதுள்ள 10க்கும் மேற்பட்ட வழக்குகளை மறைத்ததாகச் சுயேச்சை மற்றும் எதிர்க்கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்ததால் மனு நிறுத்திவைக்கப்பட்டது. அண்ணாமலை தற்போது பிரச்சாரத்தில் உள்ளார் என்பதால், அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “என்ன பயந்துட்டியா குமாரு! அந்த ஆண்டவனே நம்ம பக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

-பிரியா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

சனி 20 மா 2021