மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

மத்திய அரசுக்கு அடிமையா? எடப்பாடி பழனிசாமி பதில்

மத்திய அரசுக்கு அடிமையா? எடப்பாடி பழனிசாமி பதில்

மத்திய அரசுக்கு அடிமையாக இருந்து மாநிலத்தின் உரிமைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்துவிட்டார் என்று திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டி வருகிறது.

இந்த பிரச்சாரத்துக்கு இன்று (மார்ச் 20) விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

தேர்தல் பரப்புரையின் போது விருத்தாசலத்தில் அவர் ,

“ஸ்டாலின் பேசுகிறார். அதிமுகவும் அரசும் மத்திய ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டது என்று பேசுகிறது.மத்தியில் ஒரு ஆட்சி மாநிலத்தில் ஒரு ஆட்சி. வண்டிக்கு இரண்டு சக்கரம் சரியாக இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். அதுபோல மத்திய ஆட்சியும், மாநில ஆட்சியும் இணைந்து செயல்பட்டால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஒரு சக்கரத்தை வைத்துக்கொண்டு ஓட்ட முடியுமா? சொல்லுங்கள். மத்திய மாநில அரசுகளுக்கு சுமுகமான உறவு இருந்தால்தான் மக்களுக்கு திட்டங்களைக் கொண்டு வர முடியும்.

எந்தத் திட்டமாக இருந்தாலும் அனுமதிப்பது மத்திய அரசு...அதனால்தான் தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியைப் பெற, தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏற்றம் அடைய மத்தியிலே இணக்கமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நாம் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். எனவேதான் மத்திய அரசோடு இணக்கமான உறவைப் பேணி தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் கொண்டு வருகிறோம்”என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 20 மா 2021