மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

”போற்றிப் பாடடி பெண்ணே” : பெரியவரின் பாடலை ரசித்த கமல்

”போற்றிப் பாடடி பெண்ணே” : பெரியவரின் பாடலை ரசித்த கமல்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அங்கேயே தங்கித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சட்டமன்றத் தேர்தலையொட்டி, நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல். ‘மக்கள் கேண்டீன், தற்சார்பு கிராமங்கள், நீட் தேர்வுக்குப் பதில் சீட்’ என 108 பக்கம் கொண்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. அதே சமயத்தில் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா, இல்லையா என்ற விவாதங்களையும் சமூக வலைதளங்களில் காணமுடிகிறது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து நேற்று, மதுக்கரை, கரும்புக்கடை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை - கணபதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கமல். அதிகாலையில் நடைப்பயிற்சி சென்று வாக்கு சேகரிக்கும் கமல், இன்று (மார்ச் 20) காந்தி பூங்கா பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்த பிரபல காபி கடைக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் பேசி வாக்கு சேகரித்தார். அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

அப்போது பெரியவர் ஒருவர், சிவாஜி, கமல் நடித்து பெரிய ஹிட் கொடுத்த தேவர் மகன் படத்திலிருந்து ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடலை பாடினார். பாடலை ரசித்த படியே தேநீர் அருந்திய கமல், தன்னை சுற்றி நின்றவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக நேற்று பிற்பகல், அம்மன் குளம் பகுதியில் மக்களைச் சந்தித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் கமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென இங்கு வந்ததற்கு என்ன காரணம் எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு, “நான் போட்டியிடும் தொகுதி இது. இங்கு முதன் முறையாக வருகிறேன். மக்களின் குறைகளைக் கேட்க வந்தேன்” என்று கமல் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 20 மா 2021