மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

அமலாக்கத் துறை மீதே வழக்கு - கேரள போலீஸ் அதிரடி!

அமலாக்கத் துறை மீதே வழக்கு - கேரள போலீஸ் அதிரடி!

சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் கேரளத்தை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கு, தேர்தல் பிரச்சாரம் முடியும்வரை பேசுபொருளாக இருக்கக்கூடும் போல.. அந்த அளவுக்கு இடதுசாரிகள், பாஜக, காங்கிரஸ் மூன்று தரப்பும் இந்த விவகாரத்தைத் தொடாமல் பேசுவதாகவே இல்லை. இதில் முக்கியமாகக் குற்றம்சாட்டப்படும் ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயனை சிக்கவைக்கும்படி தவறான வாக்குமூலம் தருமாறு அமலாக்கத் துறையினர் கட்டாயப்படுத்தினர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், சதித்திட்டம், தவறான வாக்குமூலம் தருமாறு மிரட்டுவது நிர்பந்தம்செய்வது ஆகிய பிரிவுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே 18 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதையடுத்து அமலாக்கத் துறை மீது வழக்குப்பதிவது பற்றி கேரள மாநில அரசு சட்ட ஆலோசனையை நாடியது. கேரள மாநில போலீஸ் பெண் அதிகாரிகளான சிஜி விஜயன், ரெஜிமோல் ஆகிய இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

தியாகிகளை அவமதிப்பதா?- ஆலப்புழை பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்!

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் அம்பலப்புழை தொகுதியில் தேஜகூட்டணி சார்பில் போட்டியிடுபவர், அனூப் அந்தோணி ஜோசப். நேற்று இவர் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்யச்சென்றபோது, ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். தாக்கியவர்கள், ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியினர் என புகார் கூறப்பட்டுள்ளது.

முல்லைக்கல் பகவதி அம்மன் கோயில் அருகே, இடது ஜ.முன்னணியினர் நடத்திய பேரணியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. உடனே இதைக் கண்டித்து பாஜகவினர் அங்குள்ள அரசு மருத்துவமனை சந்திப்பில் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, ஆலப்புழை பாஜக வேட்பாளர் சந்தீப் வசஸ்பதி தன் மனுத்தாக்கலுக்கு முன்னர், புன்னபுர வயலார் எழுச்சி நினைவிடத்துக்குச் சென்று மலர் மரியாதை செய்தார். இந்த நினைவிடமானது, 1947-க்கு முன்னர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சிபிராமசாமி ஐய்யர் தலைமையில் மோசமான ஆட்சியை எதிர்த்து போராடி தியாகிகளான கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் நினைவாக எழுப்பப்பட்டது. சிபிஐ, சிபிஐ-எம் இரு கட்சிகளும் சேர்ந்து இதைப் பராமரித்துவருகின்றன.

புன்னபுரா போராட்டத்தில் தியாகிகள் ஆனவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் எனும்போது, அவர்களை சிறுமைப்படுத்தும்விதமாக பாஜக வேட்பாளர் நடந்துகொண்டார் என சிபிஐ கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தியாகிகளுக்கு மரியாதை செய்துவிட்டு வந்திருந்தால் நாங்கள் என்ன சொல்லப் போகிறோம்? கம்யூனிசத் தியாகிகள் நினைவிடத்தில் போய், பாஜகவின் முழக்கத்தை இடலாமா என்பதுதான் பிரச்னை என சிடுசிடுக்கிறார்கள், இடதுசாரி கட்சிக்காரர்கள்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகள் நினைவிடத்தில் திட்டமிட்டு வம்புசெய்ய பாஜக வேட்பாளர் அப்படி நடந்துகொண்டார்; அமைதியாக தேர்தல் நடந்துவிடாமல் சீர்குலைக்க விரும்புகிறார்கள் என சிபிஎம் கட்சியின் ஆலப்புழை வேட்பாளர் சித்தரஞ்சன் கூறினார்.

சிபிஐ தரப்பில் பாஜகவின் வசஸ்பதி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் சிபிஎம் கவுன்சிலர் ஒருவர் தன் காரைத் தடுத்துநிறுத்தி சீண்டியதாக பாஜக வேட்பாளர் அனூப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதே ஆலப்புழையில் கடந்த மாதம் வயலார் எனும் இடத்தில், இதைப் போலவே அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கிய கேலிகிண்டல், இளம் சங் பரிவார் ஊழியர் ஒருவரின் படுகொலையில் போய் முடிந்தது. அதில் எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 20 மா 2021