மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

வாஷிங்மெஷின் இருக்கட்டும் செல்போன் என்னாச்சு? ஸ்டாலின் கேள்வி

வாஷிங்மெஷின் இருக்கட்டும் செல்போன் என்னாச்சு? ஸ்டாலின் கேள்வி

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் வாஷிங் மெஷின் தருகிறோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மார்ச் 19 ஆம் தேதி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் அமர்ந்த 2011, 2016 தேர்தல்களில் அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.

அவர் பேசுகையில், “இப்போது அ.தி.மு.க.வின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அது அப்படியே தி.மு.க.வின் நகல். நாம் என்ன சொன்னமோ அதை அப்படியே கொஞ்சம் உயர்த்தி வெளியிட்டிருக்கிறார்கள். நான் கேட்கின்ற கேள்வி. இதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட ஒன்றையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா?

நான் சில உதாரணங்களை மட்டும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும் செல்போன் கொடுப்பேன் என்று சொன்னார்கள். யாருக்காவது கொடுத்தார்களா? கேபிள் கட்டணத்தை 70 ரூபாய்க்கு குறைப்போம் என்று சொன்னார்கள். அவ்வாறு குறைத்தார்களா? பொது இடங்களில் வை-ஃபை வசதி செய்து தருவோம் என்று சொன்னார்கள். அவ்வாறு செய்தார்களா? இப்போது தேர்தல் அறிக்கையில் அதை மறுபடியும் சொல்லி இருக்கிறார்கள். 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார்கள். அவ்வாறு செய்தார்களா? திருச்சி - மதுரை - கோவை போன்ற மாநகரங்களில் மோனோ ரயில் விடப் போகிறோம் என்று சொன்னார்கள். அவ்வாறு விட்டிருக்கிறார்களா? விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் போடப்படாது என்று சொன்னார்கள். அவ்வாறு செய்தார்களா? ஆவின் பால் லிட்டருக்கு 25 ரூபாய்க்கு தரப்படும் என்று சொன்னார்கள். அவ்வாறு கொடுத்தார்களா? நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் விடமாட்டோம் என்று சொன்னார்கள். அதை செய்தார்களா? இதுதான் அவர்கள் வாக்குறுதிகள் தரும் லட்சணம்.

நாங்கள் சொன்னதைச் செய்வோம். ஆனால் அவர்கள் சொல்வதைச் செய்ய மாட்டோம் என்று வேண்டுமானால் தேர்தல் அறிக்கைக்குத் தலைப்பு போடலாமே தவிர, வேறு வழியில்லை”என்று கூறினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 20 மா 2021