தேர்தல் முடிந்ததும் மீண்டும் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்- அன்புமணி

politics

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து தொடங்கியுள்ளார். நேற்று (மார்ச் 19) திருக்கழுக்குன்றத்தில் ,

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அணுகலாம். ஈகோ பார்க்க மாட்டார். உங்களோடு சேர்ந்து டீ காபி சாப்பிடுவார்.

ஆனால் ஸ்டாலினை அவரது கட்சிக் காரர்களே யாரும் பார்க்க முடியாது. பளார் என்று அறைந்துவிடுவார். அவ்வளவு அகங்காரம். அது தலைமையில்லை. ஆனால் இங்கே ஒரு விவசாயி முதல்வர். இன்னொரு விவசாயி துணை முதலமைச்சர். இந்த ஆட்சி தொடர வேண்டும். அதனால்தான் விவசாயிகள் ஆள வேண்டுமென்ற நோக்கத்தில்தான் மருத்துவர் கூட்டணி அமைத்துள்ளார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று சொன்னார் ஸ்டாலின். ஆனால் தள்ளுபடி செய்துவிட்டார்.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக ஒரு குற்றமும் கிடையாது.ரவுடியிசம் இல்லை. கட்டப் பஞ்சாயத்து இல்லை. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் வெளியே வர முடியாது.

உழைத்து முன்னுக்கு வந்தவர் எடப்பாடி. ஆனால் ஸ்டாலின் உழைப்பை நம்பாமல் கட்சியினரின் உழைப்பை நம்பாமல் பிரசாந்த் கிஷோரை நம்பி வந்திருக்கிறார். திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கூட பிரசாந்த் கிஷோரால்தான் நியமிக்கப்படுகிறார்கள்.

இந்தத் தேர்தல் விவசாயிகளுக்கும் முதலாளிகளுக்கும் நடக்கும் போர். இதில் விவசாயிகள் வெற்றிபெற வேண்டும்” என்று பேசிய அன்புமணி அடுத்து வன்னியர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு வந்தார்.

“.நமது 40 வருட போராட்டமான வன்னியர்களுக்கு 10% உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பது ஒரு சாதிப் பிரச்சினை அல்ல. சமூக நீதிப் பிரச்சினை. வன்னியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் அனைத்து சமுதாயங்களும் முன்னேற வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப, வன்னியர்களைப் போல் அனைத்து சமுதாயங்களுக்கும் தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இதற்காக தேர்தலுக்கு பிறகு நானும் மருத்துவர் அய்யாவும் போராடுவோம். இதை எடப்பாடி கொடுப்பார்” என்று பேசினார் அன்புமணி.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *