மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

தேவேந்திர குல வேளாளர் பொதுப்பெயர் : மக்களவையில் நிறைவேறியது!

தேவேந்திர குல வேளாளர் பொதுப்பெயர் : மக்களவையில் நிறைவேறியது!

தேவேந்திர குல வேளாளர் என்னும் பொதுப் பெயர் அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று (மார்ச் 19) மாலை நிறைவேறியிருக்கிறது.

தமிழகத்தில் மாநில பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தார், கடையர், காலாடி, குடும்பர், பள்ளர், பன்னாடி, வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என்று பொதுப் பெயரிட்டு அழைக்க வேண்டும் என்றும், அடுத்த கட்டமாக பட்டியலில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்றும் அச்சமூக பிரமுகர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மாநில அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து பல தர்பபினரின் ஆலோசனைகளைப் பெற்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி தனது உரையில் எட்டு நிமிடங்கள் தேவேந்திர குல வேளாளர்களின் பெருமையைப் பற்றி எடுத்துச் சொல்ல அந்த சமுதாயத்தினர் உச்சி குளிர்ந்துவிட்டனர். மேலும் இனி பொதுப் பெயராக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் அறிவித்தார். தேவேந்திரன், நரேந்திரன் என தன் பெயரின் ஓசை நயத்தையும் ஒப்பிட்டு சிலாகித்தார் மோடி.

முன்னதாக இந்த பெயர் மாற்ற மசோதாவை கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி மத்திய சமூக நீதி அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். அந்த மசோதா இன்று (மார்ச் 19) மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு அதன்பின், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட இருக்கிறது.

ஏழு உட்பிரிவுகளையும் இணைத்து பட்டியல் இனத்துக்குள் பொதுப் பெயராக மாற்றப்படுமென்றும், இவர்களை பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் மத்திய அரசு ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

வேந்தன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வெள்ளி 19 மா 2021