மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

பெருந்துறை: போட்டியை மாற்றுவாரா தோப்பு வெங்கடாசலம்?

பெருந்துறை: போட்டியை மாற்றுவாரா தோப்பு வெங்கடாசலம்?

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் நேற்று (மார்ச் 18) சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சரும், சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்காடசலத்தை இன்று (மார்ச் 19) அதிமுக தலைமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் 2011, 2016 என தொடர்ந்து அதிமுக சார்பில் வெற்றிபெற்றவர் தோப்பு வெங்கடாசலம். இந்த முறை அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் ஜெயக்குமார் என்பவருக்கு சீட் கொடுத்தது. இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினார். ஒன்றிய செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் பலரோடும் பேசி தனக்கான ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில்... தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்திருக்கிறார்கள்.

இதனால் பெருந்துறை தொகுதியில் திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் கே.கே.சி.பாலு, தோப்பு வெங்கடாசலம், அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் என்று மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

"2016 சட்டமன்றத் தேர்தலில் கொமதேக தனித்துப் போட்டியிட்டபோது வேட்பாளராக நின்ற இதே கே.கே.சி.பாலு 14 ஆயிரத்து 545 வாக்குகள் பெற்றார். அப்போது தோப்பு வெங்கடாசலம் அதிமுக வேட்பாளராக திமுக வேட்பாளர் கே.பி. சாமியை 12,771 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

இப்போது கே.கே.சி.பாலு திமுக கூட்டணியில் உதயசூரியனில் நிற்கிறார். தோப்பு வெங்கடாசலம் கட்சி நிர்வாகிகளின் ஆதரவோடு நிற்கிறார். எனவே அதிமுக வேட்பாளரான ஜெயக்குமார் சற்று கலக்கத்தில் இருக்கிறார். இதனால் பெருந்துறையில் போட்டி கொமதேக வேட்பாளருக்கும், தோப்பு வெங்காடசலத்துக்கும்தான்" என்று அதிமுக நிர்வாகிகளே கூறுகிறார்கள். இதனால் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரின் வேகத்தை அதிகப்படுத்துமாறு கட்சித் தலைமை கட்டளையிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 19 மா 2021