மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

20ல் அல்ல 234லிலும் பாஜகதான் போட்டி: கே.எஸ்.அழகிரி

20ல் அல்ல 234லிலும் பாஜகதான் போட்டி: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக தான் போட்டியிடுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 19) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, "நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளேன். இதுபோன்று கட்சியிலுள்ள பல்வேறு தலைவர்களும் பரப்புரையில் கலந்து கொள்வார்கள்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்திலிருந்து சித்தராமையா, தமிழகத்திலிருந்து அனைத்து முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த தேர்தலின் முக்கிய நோக்கமே தமிழகத்தை, தமிழகம் ஆள வேண்டுமா அல்லது டெல்லி ஆள வேண்டுமா என்பதுதான்.

மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றால் தமிழகத்தைத் தமிழகமே ஆளும். ஸ்டாலின் ஆள்வார். இதற்குக் கூட்டணிக் கட்சிகள் துணை நிற்கும். இல்லையெனில் தமிழகத்தை பாஜகதான் ஆளும். 20 தொகுதிகளில் பாஜக நிற்கவில்லை. 234 தொகுதிகளிலும் பாஜக தான் இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 19 மா 2021