மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

தேர்தலில் சினிமா பிரபலங்கள்: களமிறக்கிய அதிமுக!

தேர்தலில் சினிமா பிரபலங்கள்:  களமிறக்கிய அதிமுக!

தமிழகத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறுகிறபோது திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பிரச்சாரத்திற்கு சினிமா பிரபலங்களை பயன்படுத்துவது எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின் அதிகமானது

எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்குவதற்கு முன்பாக, திமுகவில் கட்சி உறுப்பினர்களாக இருந்த நடிகர்கள் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தபட்டனர். அவர் தனிக்கட்சி கண்டபின் சினிமா நட்சத்திரங்கள் பிரச்சாரத்திற்கு வருவது அரிதாகவே இருந்தது. ஜெயலலிதா அதிமுக பொதுசெயலாளரான பின்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு நடிகர், நடிகைகள், பிரபலங்கள் செல்வது ஒரு தொழிலாகவே மாற்றப்பட்டது.

அவர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சினிமாவில் நடிப்பதை போல அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கட்சி எழுதிக் கொடுப்பதை உணர்ச்சிபூர்வமாக பிரச்சாரத்தில் பேசவேண்டும். அதை கடந்து சுயமாக எதுவும் பேசக்கூடாது என்கிற நிபந்தனையுடன் அவரவர் தகுதி, பிரபலம் ஆகிய தன்மைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதனை சம்பந்தபட்ட தொகுதி வேட்பாளர்கள் கொடுத்துவிட வேண்டும் என்கிற தகவல் தலைமையில் இருந்து தெரிவிக்கப்பட்டுவிடுகிறது. கடந்த காலங்களை காட்டிலும் இந்த சட்டமன்ற தேர்தலில் குறைவான சினிமா பிரபலங்களே பிரச்சாரத்திற்கு செல்கின்றனர் என கூறப்படுகிறது

இந்நிலையில், அதிமுக கலைப்பிரிவு செயலாளரும், இயக்குனருமான ஆர்.வி.உதயகுமார், “ சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளரும் இயக்குனருமான லியாகத் அலிகான்

இயக்குனர்கள் மனோபாலா, ரங்கநாதன், ரவிமரியா, நாஞ்சில் அன்பழகன் நடிகைகள் பாத்திமா பாபு, வெண்ணிற ஆடை நிர்மலா, ஜெயதேவி மூத்த இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன், நடிகர்கள் அனுமோகன், அஜய்ரத்தினம், கஞ்சா கருப்பு, குண்டு கல்யாணம், வையாபுரி, , சிங்கமுத்து, தியாகு, சரவணன், கவிஞர் முத்துலிங்கம், விஜய் கணேஷ், போண்டா மணி, ஆகியோர் நாளை முதல் அதிமுக அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

-இராமானுஜம்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வெள்ளி 19 மா 2021