மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

ஆர்எஸ்எஸ்-சும் திகவும் ஒன்று என சொன்னது யார்? சீமான் கேள்வி!

ஆர்எஸ்எஸ்-சும் திகவும்  ஒன்று என சொன்னது யார்?  சீமான் கேள்வி!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் சமபாதி, அதாவது 117 தொகுதிகளில் பெண்களுக்குச் சீமான் வாய்ப்பு கொடுத்ததே தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், நகைச்சுவையாகவும், இயல்பாகவும் பேசி வாக்குகளைச் சேகரித்து வருகிறார். இதனிடையே சீமான் பாஜகவின் பி-டீம் என்று ஒரு சிலரால் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பாஜக மதவாதம் பற்றி பேசினால். சீமான் இனவாதம் பற்றி பேசுகிறார். பாஜக மதபான்மையினர் எதிர்க்கிறது, சீமான் மொழி சிறுபான்மையினரை எதிர்க்கிறார் என சீமான் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக நேற்று (மார்ச் 18) நடந்த ராமநாதபுரம் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார் சீமான்.

"திமுகன்னு ஒரு கட்சி இருக்கு, சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்கு செலுத்தாதீர்கள் பாஜக வந்துவிடும் என்று சொல்வார்கள். அவர்களை முதன்முதலில் அழைத்து வந்தது யார்? ஒண்ணுமே இல்லாதவர்களை ஒன்றாக ஆக்கியது யார்? இந்த நாட்டில் ஆகச் சிறந்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் எங்கள் ஐயா நல்லகண்ணு இருக்கிறார். அவர் கோவையில் நிற்கும்போது அவருக்கு எதிராக சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு சீட்டு கொடுத்து நல்லகண்ணு ஐயாவை தோற்கடித்தது யார்? காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு சீட்டுக் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது யார்? எல்லாம் திமுகதான். ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் திராவிடர் கழகம் போல ஒரு சமூக இயக்கம்தான், அதனை திமுக தொண்டர்கள் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்று கடிதம் எழுதியது யார்? கலைஞர் அவர்கள்தான். நான் இப்போது சொல்றேன் என்னை தாண்டித்தான் பாஜக நுழையனும். நம்பிக்கை இருக்கும் வீரன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குச் செலுத்து" என்று அதிரடியாகப் பேசியிருக்கிறார் சீமான்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 19 மா 2021