மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

அமமுக வேட்பாளர்களுக்கு ஆசி: அரசியல் முடிவு பற்றி சசிகலா

அமமுக வேட்பாளர்களுக்கு ஆசி:  அரசியல் முடிவு  பற்றி சசிகலா

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இரவு திடீரென, ‘நான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளேன்” என்று சசிகலா அறிவித்தது தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தான் சசிகலாவை அரைமணி நேரம் சமாதானம் செய்ததாகவும் ஆனால் அவர் தன் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அதேநேரம் அமமுக தேர்தலில் போட்டியிடும் என்பதில் மாற்றமில்லை என்பதையும் தினகரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் பிற்பகல் சென்னையில் இருந்து புறப்பட்ட சசிகலா அன்று இரவு 10.30 மணி வாக்கில் தஞ்சை வந்தடைந்தார். நேற்று அதிகாலை விளாரில் இருக்கும் குலதெய்வக் கோயிலில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் சகோதரர் பழனிவேலின் பேரப்பிள்ளைகளின் காதுகுத்து விழாவில் கலந்து கொண்டார். உற்சாகமாகவும் நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தினர், உறவினர்கள் என பலரையும் பெயர் சொல்லி அழைத்து பேசி சசிகலா மிக நிம்மதியாக இருந்தார். அதன் பின் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.

அங்கே சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோயில் வளாகத்தில் சசிகலா உறவினர்கள் சூழ வந்துகொண்டிருந்தபோது கும்பகோணம் அமமுக வேட்பாளர் பாலமுருகன் கோயில் வளாகத்திலேயே சசிகலாவை சந்தித்து வணங்கினார். விளார் கோயிலில் ஒரத்தநாடு அமமுக வேட்பாளர் மா.சேகர் அவரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

அவர்களிடம் சிரித்துப் பேசிய பின்னர் சசிகலா வீடு திரும்பினார். வீட்டில் சில உறவினர்கள் சசிகலாவிடம், “ஏம்மா... இப்படி ஒரு முடிவெடுத்தீங்க” என்று மெல்ல அவரது அரசியல் முடிவைப் பற்றி கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு சசிகலா, ‘காலம் பதில் சொல்லும், பாத்துக்கலாம் வாங்க” என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார்.

சசிகலாவுடனான நிகழ்வுகளில் பங்கேற்ற சிலரிடம் பேசினோம். “அதிமுகவில் இன்று பல பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும் சீட்டு போராட்டங்களும், சுயேச்சை போட்டியிடல் நிகழ்வுகளும் சசிகலாவின் கவனத்துக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. தான் அரசியலில் இருந்து தன் அக்காவின் சின்னம் தோற்க கூடாது என்று கருதியிருக்கிறார் சசிகலா. அதனால்தான் தற்காலிகமாக ஒதுங்கியிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு பாருங்கள்” என்று கூறுகிறார்கள் நம்பிக்கையோடு.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வெள்ளி 19 மா 2021