மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

நான் ஊர்ந்து போகப் பாம்பா? பல்லியா? : முதல்வர் ஆவேசம்!

நான் ஊர்ந்து போகப் பாம்பா? பல்லியா? : முதல்வர் ஆவேசம்!

ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்கத் தான் என்ன பாம்பா? பல்லியா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சியான திமுகவை ஆளும் அதிமுகவும் தொடர்ந்து மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்ல நேரிட்ட போது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார் சசிகலா. இந்நிலையில்,’ எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வரானார் என்று அனைவருக்கும் தெரியும்’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இன்று கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது, “நான் ஊர்ந்து போய் முதல்வர் பதவி பெற்றதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஒரு முதல்வரை எப்படிப் பேசவேண்டும் என்பது கூடத் தெரியாதவர் தான் ஸ்டாலின். ஏன் எனக்குக் கால் இல்லையா? நான் ஊர்ந்து போய் முதல்வராகப் பல்லியா? பாம்பா? நடந்து சென்றுதான் முதல்வர் பதவி ஏற்றேன்” என ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் பொய் பேசி வருகிறார். என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் ஸ்டாலினுக்குத் தூக்கமே வராது. காவிரி நீரைப் பெற்றுத் தந்ததாக ஸ்டாலின் கூறிவருகிறார். ஆனால் பெற்றுக்கொடுத்தது அதிமுக தான்.

விவசாயிகளை, நாட்டுமக்களை கண்டுகொள்ளாதவர்கள் திமுகவினர். விவசாயத்தைப் பற்றி திமுகவுக்கு அக்கறை கிடையாது என்று விமர்சித்த முதல்வர் பழனிசாமி, “நான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது. எடப்பாடி விவசாயி, விவசாயி எனக் குதிக்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். நான் குதித்தால் உங்களுக்கு என்ன?. இப்போதும் சொல்கிறேன் நான் விவசாயிதான்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அரசு மாணவர்களுக்கான 7.5 % உள் ஒதுக்கீடு கொண்டுவந்தது, மும்முனை மின்சாரம், வாஷிங் மிஷின் திட்டம், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் என அதிமுகவின் திட்டங்கள் பற்றிச் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

-பிரியா

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வெள்ளி 19 மா 2021