மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள்!

வாக்காளர் பட்டியலில்  போலி வாக்காளர்கள்!

கேரளாவில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா குற்றம்சாட்டிய நிலையில், கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் நேற்று அறிக்கை கோரியுள்ளார்.

கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ”ஒரே நபரின் பெயரில் 4-5 வாக்காளர்களை புதிதாக சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னால் அதிகாரிகளின் ஒரு திட்டமிட்டசெயல் உள்ளது” என தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் காசர்கோடு, கோழிக்கோடு ஆலப்புழா கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுக்கு, வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் 4 அல்லது 5 வாக்காளர்களை சேர்த்த விவகாரம் குறித்து மார்ச் 20க்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய குற்றச்சாட்டு உண்மை எனக் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் டீகா ராம் மீனா தெரிவித்தார்.

இந்நிலையில் போலி வாக்காளர்களின் பெயர்களையும் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டிருந்தார். கெழகூட்டத்தில் 4506, கொல்லத்தில் 2534, திரிக்கரிப்பூரில் 1436, நாடபுரத்தில் 6171, கொய்லாண்டியில் 4611, கூத்துப்பரம்பாவில் 3525,அம்பலப்புழாவில் 4750 போலி வாக்காளர்கள் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் புகார் கூறியுள்ளார். எதிர்கட்சி தலைவரின் இந்த அறிக்கையால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா வெளியிட்ட அறிக்கையில், “கேரளாவில் தற்போது 26731509 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,77,92,63 பெண்கள், 12,95,20,25 ஆண்கள் மற்றும் 221 திருநங்கைகள் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட 62,14,01 வாக்காளர்கள் வாக்காளர்கள், 9,07,09 குடியேறிய இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

2016 சட்டமன்றத் தேர்தலில், 21498 வாக்குச் சாவடிகள் இருந்தன.ஆனால் இந்த முறை கோவிட் தொற்றுநோய் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 40771 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணிக்கு முடிவடையும்.

549 முக்கியமான இருப்பிட வாக்குச் சாவடிகள் உள்ளன. 433 பாதிக்கப்படக்கூடிய பிரிவின் கீழ் வருகின்றன, மேலும் இந்த சாவடிகள் அனைத்தும் மத்திய பாதுகாப்பு வசதியைக் கொண்டிருக்கும். வெப்காஸ்டிங் 50 சதவீத வாக்குச் சாவடிகளில் இருக்கும்" என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது போலிவாக்காளர் பிரச்சனையை எதிர்க்கட்சி தலைவர் தொடக்கியுள்ள நிலையில் கேரளாவில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.

-சக்தி பரமசிவன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வெள்ளி 19 மா 2021