மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

கோடிகளில் சொத்து....அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர்!

கோடிகளில் சொத்து....அம்பாசமுத்திரம் அதிமுக வேட்பாளர்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். இவர் திமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனை எதிர்த்துப் போட்டியிடுகிறார்

இசக்கி சுப்பையா, சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீக் தயாளிடம் தனது வேட்புமனுவை நேற்று (மார்ச் 18) தாக்கல் செய்தார். அதில் அவர் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுத்துள்ளார்.

அதில், இசக்கி சுப்பையா பெயரில் அசையா சொத்து ரூ.208.75 கோடியும், அவரது மனைவி மீனாட்சி பெயரில் ரூ.30 கோடியும் உள்ளது. மேலும் இசக்கி சுப்பையா பெயரில் ரூ.3.75 கோடி அசையும் சொத்தும், அவரது மனைவி பெயரில் ரூ.3 கோடி அசையும் சொத்தும் உள்ளது. இசக்கி சுப்பையா பெயரில் மட்டும் மொத்தம் ரூ.212.5 கோடி அசையும், அசையா சொத்துகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கடனாக ரூ.4.5 கோடியும், அவரது மனைவி பெயரில் ரூ.65 லட்சமும் உள்ளது. கையிருப்பு தொகையாக இசக்கி சுப்பையாவிடம் ரூ.54 ஆயிரமும், அவரது மனைவியிடம் ரூ.49 ஆயிரமும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோடிக்கணக்கில் சொத்து இருப்பதை வேட்பு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டாமல் உள்ளபடி கணக்குக் காட்டியதாக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

-சக்தி பரமசிவன்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

வியாழன் 18 மா 2021