மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

ஐஜி முருகன் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம்!

ஐஜி முருகன் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம்!

தமிழகத்தில் உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட9 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 17) உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசு அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 9 காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, அவர்களுக்குத் தேர்தல் சார்ந்த பணிகள் ஒதுக்கப்படக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப் பிரிவு - ஆர். அன்பரசன், எம்.வேல்முருகன், ஹெச்.கிருஷ்ணமூர்த்தி,

சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு - கோவிந்தராஜ்,

வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு - திருநாவுக்கரசு,

திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு - கோபால சந்திரன்,

சென்னை பொருளாதார குற்றப் பிரிவு - எம்.எஸ்.எம் வளவன்,

பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு (விழுப்புரம்) - ராதாகிருஷ்ணன்,

ராமநாதபுரம் மாவட்ட குற்ற ஆவண பணியகத்தில் பணியாற்றி வந்த சுபாஷ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோன்று தென்மண்டல ஐ.ஜி. முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு உடனடியாக மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்மண்டல போலீஸ் ஐஜி முருகன் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தார். நெல்லை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில் அவர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கை தெலங்கானா மாநிலத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

புதன் 17 மா 2021