மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

மறைந்தும் தேர்தலில் விவாதமாகும் ஜெயலலிதா

மறைந்தும் தேர்தலில் விவாதமாகும் ஜெயலலிதா

மார்ச் 14 ஆம் தேதி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டு நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் திமுகதான்.. ஜெயலலிதா மண்ணில் இருந்து மறைய கருணாநிதியும், மு.க ஸ்டாலினும்தான் காரணம். இதை நாட்டு மக்கள் அறிவார்கள். ஜெயலலிதா நிரபராதி என்று அறிவிக்கப்பட்ட போதும் அவருக்கு எதிராக மேல்முறையீடு செய்து நெருக்கடி கொடுத்தார். உரிய சிகிச்சை அளிப்பதில் நெருக்கடி கொடுத்தார்கள். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை ஒருபோதும் மன்னிக்காது”என்று கூறினார்.

மேலும் தனது பிரச்சாரங்களிலும், இதை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 17) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை சட்ட ஆலோசகர் என்.ஆர் இளங்கோ ஆகிய எம்பிக்கள் சில கேள்விகளை எடப்பாடி பழனிசாமிக்கு முன் வைத்தனர்.

“ ஜெயலலிதா மீதான தண்டனைத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் 2015 மே மாதம் இந்த வழக்கிலே கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதத்தை பாமக தலைவர் ஜி.கே.மணி. வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்துக் கொடுத்தனர். இது மே 14 ஆம் தேதி பத்திரிகைகளில் வந்துள்ளது. ‘இந்த நீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக முயற்சிக்கிறார். இதைத் தடுக்க வேண்டும்’ என்று ராமதாஸ் சித்தராமையாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதான் உண்மையாக இருக்கும்போது முதல்வர் எடப்பாடி திட்டமிட்டு புளுகுவது எந்த விதத்தில் நியாயம்? அப்படிப் பார்த்தால் பாமகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டிருப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமா இல்லையா என்பதை ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் சிந்திக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உண்மை இப்படி இருக்க திட்டமிட்டு பொய் பரப்பும் எடப்பாடி இனியாவது திருத்திக்கொள்ள வேண்டும். இதை வீதி வீதியாக சென்று திமுக மக்களிடம் சொல்லும். ஜெ. மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை அளிக்காமல் தடுக்கிற சக்தி எது என்ற இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றும் கூறினார்.

ஜெயலலிதா மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிய பிறகும் இந்தப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவே பேசுபொருளாக இருக்கிறார்.

வேந்தன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

புதன் 17 மா 2021