மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

கொரோனா அதிகரிப்பு: நல்லாட்சிக்கான சோதனை!

கொரோனா அதிகரிப்பு: நல்லாட்சிக்கான சோதனை!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது நல்லாட்சிக்கான சோதனையாகவே கருதுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவது தொடர்பாக இன்று(மார்ச் 17) பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,”சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. நாட்டின் 70 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் 150 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவிகிதத்துக்கு அதிகமானோர் குணமாகியுள்ளனர். கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

கொரோனாவின் இரண்டாவது அலை பரவுவதை தடுக்க முன்கூட்டியே செயல்படுவது அவசியமானது. கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்கவில்லையென்றால், மிகப்பெரிய சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், பெரிய நகரங்கள் மட்டுமில்லாமல் சிறிய நகரங்கள் மற்றும் கிராம பகுதியிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஒரு சில இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் குறைவாக இருக்கிறது. அது எதனால் என்பதை கண்காணிக்க வேண்டும்.

தெலங்கானா, ஆந்திரா, உத்திரபிரதேசத்தில் 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் வீணாகியுள்ளது. தடுப்பூசி வீணாவதைத் தடுக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்.

பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதில் சில உள்ளூர் நிர்வாகங்கள் கண்டிப்புடன் செயல்படுவதில்லை. அதில் கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நாட்டிற்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நம்பிக்கை அதீத நம்பிக்கையாக மாறிவிடக் கூடாது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது நல்லாட்சிக்கான சோதனையாகவே கருதுகிறேன். கொரோனா இரண்டாவது அலையை தடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 17 மா 2021