மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

தேர்தலில் போட்டியில்லை :அர்ஜுன மூர்த்தி

தேர்தலில் போட்டியில்லை :அர்ஜுன மூர்த்தி

போதிய கால அவகாசம் இல்லாததாலும், வேட்பாளர்களின் பிரசாரத்துக்குத் தேவையான ரோபோக்களை உருவாக்குவது மற்றும் கொண்டு செல்வது போன்றவற்றைச் செய்ய போதிய காலம் இல்லாததாலும் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கட்சி நிறுவன தலைவரும் நடிகர் ரஜினிகாந்த்தின் நண்பருமான

அர்ஜுனமூர்த்தி இன்று அறிவித்துள்ளார்

சிலமாதங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி துவங்க முடிவுசெய்தார். அவர் தொடங்க இருந்த அரசியல் கட்சியின் பொறுப்பாளராக பாஜகவிலிருந்து வந்த அர்ஜுன மூர்த்தி அறிவிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதைக் கைவிட்ட நிலையில் அர்ஜுன மூர்த்தி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற முழக்கத்தோடு, இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி, அதன் சின்னமாக ரோபோவையும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

மேலும், அண்மையில் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், தற்போது போதிய கால அவகாசம் இல்லாததாலும், வேட்பாளர்களின் பிரசாரத்துக்குத் தேவையான ரோபோக்களை உருவாக்குவது மற்றும் கொண்டு செல்வது போன்றவற்றைச் செய்ய போதிய காலம் இல்லாததாலும் இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், காலத்துக்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம். வேட்பாளர்கள் தேர்வு செய்தல், தேவையான மற்ற வளங்கள் சேகரிப்பு மற்றும் சீரிய நிர்வாகம், அனைத்துத் தொகுதிகளிலும் இயந்திர மனிதன் சின்னத்திற்கான தொழில்நுட்பத்தை வரிசைப்படுத்துதல், எடுத்துச் செல்வது, களப்பிரசாரம் செய்வது அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் கையாளுவது நமக்கு இடம் தரவில்லை என்பதே உண்மை.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்திப் பங்கேற்க வேண்டாம் என்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி முடிவு செய்துள்ளது என்று அறிவித்துள்ளார்.

-சக்தி பரமசிவம்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

புதன் 17 மா 2021