மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

சுயேட்ச்சை வேட்பாளராக களமிறங்கும் மன்சூர் அலிகான்

சுயேட்ச்சை வேட்பாளராக களமிறங்கும் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நடிகர் மன்சூர் அலிகான், கடந்த லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இம்முறை சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சட்டசபை வேட்பாளராக தாம் போட்டியிட உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். இதனிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று சசிகலாவை சந்தித்தார். இதனால் மன்சூர் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. இதனையடுத்து பிப்ரவரி மாத இறுதியில், திடீரென செய்தியாளர்களை வரவைத்த மன்சூர் அலிகான், சட்டசபை தேர்தலில் சீமான் தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என்றும் இது தனக்கு வருத்தத்தை தருவதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளதாகவும் அறிவித்தார். சீமான் மீது அதிருப்தியில் இருந்த நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரும் மன்சூர் அலிகானுடன் கை கோர்த்துள்ளனர்.

இந்நிலையில், மன்சூர் அலிகான் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார். நாளை காலை தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள்’ என்னும் கட்சியை தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு கிடைக்காததால், மன்சூர் சுயேட்சையாக களம் இறங்குகிறார்.

- தீரன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 17 மா 2021