மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

மாற்றப்பட்ட வேட்பாளர்:ஸ்டாலின் ஆறுதல்- எதிர்க்கட்சி பேரம்!

மாற்றப்பட்ட வேட்பாளர்:ஸ்டாலின் ஆறுதல்- எதிர்க்கட்சி பேரம்!

சேலம் வீரபாண்டி, ஏற்காடு தொகுதிகளுக்காக பிரச்சாரம் செய்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் மார்ச் 16ஆம் தேதி சேலம் வந்தார், ரேடிசன் ஹோட்டலில் தங்கியிருந்த ஸ்டாலின், ‘அந்த ஆத்தூர் வேட்பாளரை மாத்தினோமே... அந்த ஜீவாவை குடும்பத்தோடு வரச் சொல்லுங்க, அவங்களை பாத்து பேசிடுறேன்” என்று மாவட்டச் செயலாளரிடம் உத்தரவிட உடனடியாக தகவல் ஆத்தூரில் தேர்தல் பணியில் இருந்த முன்னாள் கவுன்சிலர் ஸ்டாலினுக்கு (ஜீவாவின் கணவர்) சொல்லப்பட்டது.

“தலைவர் குடும்பத்தோட வர சொல்றாரு”என்று ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட, ஆத்தூர் ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு ஹோட்டலுக்கு சென்றார்.

மாற்றப்பட்ட வேட்பாளர் ஜீவா, அவரது கணவர் ஸ்டாலின், குழந்தைகளை வரவேற்ற திமுக தலைவர், “வாப்பா... வாம்மா... லோக்கல் பிரச்சினையால இந்த மாற்றம் செய்ய வேண்டியதாப் போச்சு. உங்களப் பத்தி எனக்கு நல்லா தெரியும். நான் உங்களை கைவிட மாட்டேன். என்னை நம்புங்க சரியா”என்று சொல்லியிருக்கிறார். “சரிங்க தலைவரே...” என்று இருவரும் கை கூப்ப குழந்தைகளைக் கூப்பிட்டு பெயரைக் கேட்டிருக்கிறார் ஸ்டாலின். தமிழிசை, யாழிசை என இருவரும் பெயர் சொன்னதும், ‘நல்ல பேரு’என்று சொல்லி தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.

வேட்பாளர் மாற்றப்பட்ட தகவல் கிடைத்ததுமே தற்போதைய வேட்பாளர் சின்னதுரையின் ஆதரவாளர்கள் ஆத்தூர் நகர திமுகவினர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியத்தை தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அவரை வாழ்த்தி கோஷமும் இட்டிருக்கிறார்கள். இந்தத் தகவலும் தலைமைக்குச் சென்றிருக்கிறது.

இதற்கிடையில் திமுக வேட்பாளர் மாற்றப்பட்டதை வைத்து ஏற்பட்டிருக்கும் சலசலப்புகளை வைத்து பிற கட்சிகளும் அடுத்த ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆத்தூர் ஸ்டாலின், “இன்று (மார்ச் 17) காலை எனக்கு ஒரு போன் வந்தது. எதிர்முன்னையில் பேசிய அதிமுககாரர், ‘தம்பி எங்க இருக்கீங்க. நீங்க எந்த கவலையும் படாதீங்க உடனே அண்ணனை பார்க்க வாங்க. உங்களுக்கு இருக்குற சப்போர்ட்டுக்கு சுயேச்சையாகவே நீங்க நிறுத்தலாமே...ரெண்டு கோடி வரைக்கும் தர தயாரா இருக்கோம்’ ம்னு சொன்னாங்க. ஆனா நான் செத்தாலும் என் மேல திமுக கொடிதான் போர்த்தணும். நீங்க போனை வையுங்கனு சொல்லிட்டேன்”என்றார்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

புதன் 17 மா 2021