மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

அம்மாதான் எல்லாமே: கண்கலங்கிய குஷ்பு

அம்மாதான் எல்லாமே: கண்கலங்கிய குஷ்பு

என் வாழ்வில் எல்லாமே எனக்கு அம்மாதான் என்று நடிகை குஷ்பு கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கண்கலங்கிப் பேசினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியிலிருந்து பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். இதற்காகத் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ”ஆயிரம் விளக்கு தொகுதி ஒன்றும் திமுகவின் கோட்டை கிடையாது. நான் இங்குப் போட்டியிடுவதற்குப் பயப்படவில்லை. கடுமையாக உழைத்து வெற்றி பெறுவேன்” என்று கூறிவருகிறார்.

இந்த சூழலில் இன்று (மார்ச் 17) ஆயிரம் விளக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பேசிய அவர், தாயின் ஆசீர்வாதம் இல்லாமல் வாழ்வில் எதுவும் நடக்காது. நான் உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால் அதற்கு எனது தாய்தான் காரணம்.

ஒவ்வொரு வெற்றியையும் அம்மாவின் காலடியில் சமர்ப்பிக்கிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என எனது தாய் நாள்தோறும் இறைவனைப் பிரார்த்திக்கிறார் என்று கண்கலங்கித் தழுதழுத்த குரலில் பேசினார். 35 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் தமிழகம் வந்த எனக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்த தமிழ் மக்களை நம்பியே இந்த தேர்தலில் களம் காண்கிறேன் என்று குஷ்பு கூறியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பயம் என்பதே எனது அகராதியில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

புதன் 17 மா 2021