மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

எய்ம்ஸ் அமைந்ததா? ஜிஎஸ்டி வரி குறைக்க முடிந்ததா? : ஸ்டாலின் கேள்வி!

எய்ம்ஸ் அமைந்ததா? ஜிஎஸ்டி வரி குறைக்க முடிந்ததா? : ஸ்டாலின் கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நத்தம் மற்றும் வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 17) பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் மக்களைச் சந்தித்த ஒரே இயக்கம் திமுக தான். தற்போது முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் உங்களைத் தேடி வந்துள்ளேன்

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதாவிடமே கொள்ளை அடித்தவர். இதனால், அவருக்கு நத்தம் தொகுதியைத் தவிர்த்து ஆத்தூர் தொகுதியைக் கொடுத்துத் தோல்வியடைய வைத்தார் ஜெ. என்னுடைய 14 வயதிலேயே எனது அரசியல் வாழ்க்கை துவங்கியது. பள்ளி மாணவர்களைத் திரட்டி இளைஞர் திமுக.,வை உருவாக்கி படிப்படியாக முன்னேறியுள்ளேன்.

தமிழகத்தில் முதல்வராக இருந்துகொண்டு பழனிசாமி தவறான, பொய்யான பிரசாரத்தைச் செய்து வருகிறார். கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என கருணாநிதி கொடுத்த வாக்குறுதியைப் பதவியேற்ற மேடையிலேயே நிறைவேற்றினார். திமுக கொடுத்த இலவச டிவி எல்லா வீடுகளிலும் உள்ளது. ஆனால் அதிமுக கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, பேன்கள் எல்லாம் காயலான் கடையில் தான் இருக்கிறது.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் தருவதாகக் கூறி திமுக ஏமாற்றிவிட்டதாக முதல்வர் பழனிசாமி பொய் சொல்கிறார். நாங்கள் ஏழைகளுக்கு நிலம் கொடுத்தோம் என நான் நிரூபிக்கத் தயார். கொடுக்கவில்லை என நிரூபிக்க முதல்வர் தயாரா? என சவால் விடுகிறேன். 2006ம் ஆண்டு 1,89,719 ஏக்கர் நிலத்தை 1,50,159 பேருக்கு திமுக ஆட்சி வழங்கியது. 2016ல் கூறிய வாக்குறுதிகள் பலவற்றை அதிமுக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என கடந்த மக்களவை தேர்தலில் கூடச் சொன்னார்கள். ஆனால், ரத்து செய்யாமல் ஏமாற்றி, திமுக தான் நீட் கொண்டுவந்தது என அபாண்டமாகப் பொய் கூறுகிறார்.

உண்மை என்னவெனில் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரையில் தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால், பழனிசாமி ஆட்சியில் தான் நீட் வந்துள்ளது. அதேபோல், செல்போன் கொடுப்போம் என வாக்குறுதி கூறினார். இதுவரை யாராவது ஒருவருக்கு செல்போன் கொடுத்திருந்தால் நான் மன்னிப்பு கேட்க தயார். இப்போது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி என சொல்கின்றனர். தமிழகத்தில் 1.97 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அப்படி இருக்கையில் 1.97 கோடி பேருக்கு வேலை கொடுக்க முடியுமா? இப்படி தவறான, பொய்யான வாக்குறுதிகளைத் தான் முதல்வர் சொல்லி வருகிறார்" என பேசினார்.

பகல் 12.25க்கு மதுரை பழங்காநத்தத்தில் பிரச்சாரத்தைத் துவக்கி அவர் பேசியதாவது, உங்களின் இந்த உற்சாகமான வரவேற்புக்கு நன்றி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் ஆதரவு கேட்டு மதுரை மேற்கு தொகுதி சின்னம்மாள், மத்திய தொகுதி வேட்பாளர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ,மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி மதுரை தெற்கு மதிமுக வேட்பாளர் பூமிநாதன் ஆகியோருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்.

மதுரை மேற்கு தொகுதி நமது சின்னம்மாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை எதிர்த்து துணிச்சலுடன் போட்டியிடுகிறார்.

நான் தேர்தலுக்காக மட்டும் இங்கு வருபவன் இல்லை.எப்போதும் உங்களைத் தேடி வருபவன்.50ஆண்டுக்கால அரசியல் அனுபவம் எனக்கு இருக்கிறது சிறுவயதிலிருந்தே படிப்படியாகப் பொறுப்புகளை ஏற்று இன்று கட்சி தலைவராகியிருக்கிறேன்.கலைஞரின் மகன் நான் சென்னை மேயராக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக துணைமுதல்வராக பதவிவகித்து இன்று நான் கலைஞர் மகனாக முதல்வர் வேட்பாளராக உங்களிடம் ஒட்டுகேட்க வந்துள்ளேன்.

அதிமுக ஜெயிப்பதும் பிஜேபி ஜெயிப்பதும் ஒன்றுதான். தமிழகத்தில் கடந்த மக்களவை தொகுதியில் 39இடங்களில் வெற்றி பெற்றோம்.ஒரு தொகுதியில் அதிமுக ஜெயித்தது.அந்த அதிமுக எம்பி பிஜேபி யாக செயல்படுகிறார்.இவர்களால் நீட்தேர்வை தடுக்கமுடிந்ததா? ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிந்ததா ?மதுரைக்கு 2014இல் அறிவித்த எய்ம்ஸ் வந்ததா ?. 2014அறிவித்த திட்டத்துக்கு 2019இல் மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.ஒரு செங்கல்லாவது இதுவரை வைக்கமுடிந்ததா.திமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் முழு வீச்சில் நடைபெறும்.நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தலை மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி க்கு முழுமையாக நடத்துவோம்.

போக்குவரத்து சத்துணவு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் துணை முதல்வர் கோட் சூட் போட்டு வெளிநாடு போய் வந்தார்களே நிதி வாங்கமுடிந்ததா? உளுத்தம்பருப்பு திமுக ஆட்சியில்ரூ 60 ஆக இருந்தது இப்போது ரூ115 ஆகவும், துவரம்பருப்பு ரூ38 ஆக இருந்தது ரூ105 ஆகவும் உயர்ந்துள்ளது.

பழனிசாமியும் மோடியும் இப்படித்தான் விலைவாசியை கூட்டி வருகின்றனர். மார்ச் 7 இல் திருச்சி திமுக கூட்டத்தில் நான் 7உறுதி மொழி வெளியிட்டேன் பத்தாண்டு கால தொலைநோக்கு திட்டமாக . பொருளாதாரம், விவசாயம், நீர்வளம் ,சுகாதாரம் கல்வி, சமூகநீதி ,நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு இவையனைத்தும் பத்தாண்டுகளில் நிறைவேற்றுவோம். சொல்வது நான் கலைஞர் மகன், செய்வதைத்தான் சொல்வேன்.

நமது தேர்தல் அறிக்கை கதாநாயகன் அவர்கள் அதிமுக நமது தேர்தல் அறிக்கையை காப்பியடித்து காமெடி கதாநாயகன் மாதிரி அறிவித்துள்ளார்கள். நாளை கூட அவர்கள் புதிதாக அறிவிப்பார்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு ஹெலிகாப்டர் தருவோம் .வீடு தோறும் ரயில் தருவோம் என்பார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை கலைஞர் காலத்தில் இருந்தே பிரபலமானது.

பெண்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க மகளிர் சுய உதவிக்குழுவை துவக்கினார். கொரோனா வந்ததும் முதலில் நான் தான் சட்டசபையில் குரல் கொடுத்தேன்.கொரோனா தமிழகத்துக்கு வராது ஒரு உயிர்கூட போகவிட மாட்டோம் என்றார்கள் எத்தனை உயிர் போனது.கூட்டத்தில் வரும் மக்களே மாஸ்க் இல்லாமல் வராதீர்கள் கொரோனா மீண்டும் வருகிறது.

நாம் நலமுடன் இருந்தால்தான் நமது சந்ததிகள் நலமுடன் இருக்கும். ஆகையால் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடுங்கள் கொரோனா நிவாரண நிதியாக அனைவருக்கும் ரூ 5,000 கொடுக்கச்சொன்னோம் ரூ 1000 தான் கொடுத்தார்கள். மீதி 4000 திமுக ஆட்சிக்கு வந்ததும் வழங்கும். மதுரையில் மிகப்பெரிய நூலகம் அமைக்கப்படும். ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்போம்” என்றார்

-சக்தி பரமசிவன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

புதன் 17 மா 2021