மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

அமமுகதான் தேமுதிகவை அழைத்தது : தினகரன்

அமமுகதான் தேமுதிகவை அழைத்தது :  தினகரன்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் கூட முழுமையாக இல்லை. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பிரச்சாரம், வேட்பாளர்கள் மாற்றம் எனத் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

இதனிடையே அதிமுகவிலிருந்து விலகி தேமுதிக அமமுகவில் இணைந்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனோ, தேமுதிக பொருளாளர் பிரேமலதாவோ கையெழுத்திடவில்லை. அமமுக துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழனும் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவனும் கையெழுத்திட்டனர். இதுகுறித்து மின்னம்பலத்தில் தேமுதிகவுடன் கூட்டணி: தினகரனின் 'கோவில்பட்டி' கணக்கு! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை 11 மணியளவில் நேரில் சந்தித்துப் பேசினார். தேர்தல் பிரச்சார திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பின் டிடிவி தினகரன், சுதீஷ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன், ”இன்று தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். தீய சக்தியான திமுக, துரோக சக்தியான அதிமுகவை வீழ்த்துவதற்காகவும், ஊழல் இன்றி, வெளிப்படையாக, மக்களுக்கு நன்மைகளைக் கொடுக்கும் ஆட்சியை ஏற்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டதுதான் இந்த கூட்டணி. எங்களது ஒரே குறிக்கோள் அதிமுகவையும், திமுகவையும் வீழ்த்த வேண்டும் என்பது தான்” என்றார்.

சிஏஏ, நீட் என மத்திய அரசு கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் தேமுதிக ஆதரித்தது, அதை அமமுக எதிர்த்தது. இப்போது கூட்டணி வைத்துள்ளீர்கள், முரண்பாடு உள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த தினகரன், “ஒருசில கொள்கைகள் வேறாக இருக்கலாம். அதனால் கூட்டணி வைக்கக் கூடாது என்றில்லை” என்று பதிலளித்தார்.

சசிகலாவின் ஆதரவு எங்களுக்குத்தான் என்று தெரிவித்த அவர், “கடந்த 10, 15 நாட்களாக தேமுதிக, அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இறுதிக் கட்டத்தில் கூட்டணி அமைக்கவில்லை. தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமமுகதான் அழைப்பு விடுத்தது என்றார்.

மேலும், நடைமுறையில் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்கள். ஏறத்தாழ 7 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்குக் கடன் உள்ளது. ஆனால் தமிழகம் வெற்றி நடை போடுகிறது என்று கூறுகின்றனர். ஆளும் கட்சி எல்லாம் முடிந்துபோய்விட்டது. .” என்றார்.

தொடர்ந்து பேசிய தினகரன், "தேமுதிக கூட்டணிக்கு வருகிறது. தேமுதிகவினர் இந்த தொகுதிகளை கேட்கிறார்கள், விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சொன்னவுடன், அமமுக நிர்வாகிகள் தாங்களாக முன்வந்து வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றனர். 42 வேட்பாளர்கள் திரும்பப் பெறப்பட்டனர்” என்று குறிப்பிட்டார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 17 மா 2021