மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

விஜயகாந்தைச் சந்திக்கும் டிடிவி தினகரன்

விஜயகாந்தைச் சந்திக்கும் டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தைச் சந்திக்க இன்று (மார்ச் 17) அவரது இல்லத்துக்குச் செல்கிறார்.

நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக கடைசி நேரத்தில் அக்கூட்டணியில் இருந்து விலகி அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6, ஓவைசி 3, மக்களரசு கட்சி, கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் ஆகிய நான்குபேருக்கும் தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக தலைமை சில நிபந்தனைகளை வைத்துள்ளது. அதையெல்லாம் பேசி 60 சீட்டுகள் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார் தினகரன்.

கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானபோது தினகரன் திருவண்ணாமலை சென்று அதன் பின் தான் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதனால் ஒப்பந்தத்தில் கூட டிடிவி தினகரன் கையெழுத்திடவில்லை. துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் தான் கையெழுத்திட்டார். தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவன் கையெழுத்திட்டார்.

இரு கட்சித் தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்று இரு கட்சியினருமே விரும்பினர். இந்த நிலையில் நேற்று முன் தினம் தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “நாங்கள் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் தான்”என்று அறிவித்தார்.

இந்தப் பின்னணியில்தான் விஜயகாந்தை சந்திக்க இன்று காலை சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு தினகரன் செல்கிறார்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

புதன் 17 மா 2021