மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

தொழில் தொடங்க குமரி இளைஞர்கள் முன்வர வேண்டும்: பொன்.ராதா

தொழில் தொடங்க குமரி இளைஞர்கள் முன்வர வேண்டும்: பொன்.ராதா

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று (மார்ச் 16) தனது வேட்புமனுவை, தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மா.அரவிந்த்திடம் தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கன்னியாகுமரி தொகுதியில் சாதி, மதம் ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள். மக்கள் அதை நம்ப வேண்டாம்" எனக் கூறினார்.

”குமரி மாவட்டத்தில் மாவட்ட மக்கள் விருப்பத்தின் அடிப்படையில்தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ள நான்கு வழிச் சாலை, இரட்டை ரயில் பாதை திட்டங்கள் நிறைவேற்றப்படும். இஎஸ்ஐ.மருத்துவமனை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவது, ரப்பர் பூங்கா அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

தேர்தல் நெருங்கி வரும்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் சாதனையைச் சொல்ல கடுகளவுகூட வாய்ப்பில்லை. இதனால் சாதி, மதம் ரீதியான உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள். மக்கள் அதை நம்ப வேண்டாம் . குமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தொழில் தொடங்க குமரி மாவட்ட இளைஞர்கள் முன்வர வேண்டும். மாவட்ட மக்கள் என்னையும் மறக்கவில்லை. நான் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களையும் மறக்கவில்லை. இந்தத் தேர்தலில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” என்றார்.

குமரி தொகுதியில், சுசீந்திரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக ஓட்டுக்கேட்டதும், நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்தி ஓட்டுக்கேட்டதும் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் வலு சேர்த்துள்ளது

-சக்தி பரமசிவன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 17 மா 2021