மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

நீதிக்காக கேரள முதல்வருக்கு எதிராக போட்டியிடும் தாய்!

நீதிக்காக கேரள முதல்வருக்கு எதிராக போட்டியிடும் தாய்!

கேரள மாநிலம் வாளையாரில் கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சகோதரிகளின் தாய், வரும் கேரள சட்டசபைத் தேர்தலில் மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையார் பகுதியில் குடியிருப்பவர் கிருஷ்ணன். அவரது மனைவி மீனா. இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாலதி மற்றும் ராணி என்ற இரு மகள்கள் இருந்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 வயது நிரம்பிய மூத்த மகள் மாலதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலீசார் போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்த சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் மற்றொரு கொடூரம் அங்கு நிகழ்ந்தது,

மாலதி கொலை செய்யப்பட்டுச் சரியாக இரண்டு மாதத்தில் அவரின் தங்கை ராணியும் அதே வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிருஷ்ணன் என்பவரின் உறவினர்கள் முத்து, ஷிபு, மது மற்றும் பிரதீப் குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது

இந்த சம்பவம் அரங்கேறி 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி திருச்சூரில் செய்தியாளர்களிடம் அவர் இன்று (மார்ச் 16) பேசியபோது

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு நீதி மறுக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் முதல்வருக்கு எதிராகப் போட்டியிடுகிறேன். இந்த முடிவு அனைத்து தாய்மார்களுக்குமானது.

முதல்வரிடம் நீதி கேட்க வேண்டும். அதனால்தான் அவருக்கு எதிராகக் களமிறங்குகிறேன். இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என முதல்வர் எங்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால், நீதி இதுவரை கிடைக்கவில்லை.

மாறாக, இந்த வழக்கில் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட காவல் துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. நீதி கேட்பதற்கு இதுவே சரியான நேரமாக எனக்கு தோன்றியது.

சங் பரிவார் அமைப்புகளைத் தவிர்த்து முதல்வருக்கு எதிராகப் போராடும் எந்தக் கட்சியின் ஆதரவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன்" என்றார்.

எதிர்ப்புக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சுயேச்சை வேட்பாளராக

தர்மடோம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். முதல்வருக்கு எதிராக குரல் எழுப்ப இது எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். எனது குழந்தைகளுக்கு நீதிக்காக நான் போட்டியிடுகிறேன், சங்க பரிவாரைத் தவிர வேறு எவரிடமிருந்தும் ஆதரவைச் சேர்ப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

இதற்கிடையில், தர்மடோம் வேட்பாளரைக் காங்கிரஸ் அறிவிக்கவில்லை. கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், வாளையார் சிறுமிகளின் தாய் தனது வேட்புமனுவை அறிவித்ததால், அவருக்கு ஆதரவை வழங்குவது பரிசீலனையில் உள்ளது என்று பதிலளித்தார்.

விசாரணையை நாசப்படுத்த முயன்ற டி.எஸ்.பி சோஜன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் செயலற்ற தன்மையைக் குற்றம்சாட்டியதால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் மனதாலும் உடலாலும் தாக்கப்பட்டிருந்தார். எனவே, பாலக்காட்டில் ஜனவரி 26 முதல் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் சத்தியாகிரகத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

-சக்தி பரமசிவன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

செவ்வாய் 16 மா 2021