மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

’தேர்தல்னா மட்டும்தான் வர்றாரு’: அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!

’தேர்தல்னா மட்டும்தான் வர்றாரு’: அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்!

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நேற்று முதல் தனது தொகுதியான திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக சார்பில் திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் இவர், இன்று (மார்ச் 16) தாடிக்கொம்பு சாலையில் உள்ள 1வது வார்டுக்கு உட்பட்ட பாலதிருப்பதி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார்.

அப்போது, அவரை அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். போன தேர்தலுக்கு வந்தவரு, திரும்ப இப்பதான் வர்றாரு, தேர்தல்னா மட்டும் வர்றாரு என்று கூறி அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் ஒடை, தெருவிளக்கு என எந்த அடிப்படை வசதியுமே செய்து தரப்படவில்லை என்று கூறி முற்றுகையிட்டனர். இதனால் கலக்கமடைந்த அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்ய முயன்றனர். இதனிடையே அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இதனால் மேலும் கோபமடைந்த பெண்கள் , என்ன பிரச்சினை என்று கூட கேட்காமல், இந்த பகுதிக்குள் வந்த பார்க்காமல் கிளம்பிச் சென்றுவிட்டார் என்றும் குற்றம்சாட்டினர்.

இதுபோன்று அய்யங்குளம் பகுதியிலும் அமைச்சருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அந்த பகுதியில், 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் வீடுகளை அதிகாரிகள் காலி செய்யச் சொல்வதாகக் கூறி பொது மக்கள் திண்டுக்கல் சீனிவாசனின் காரை முற்றுகையிட்டனர். சொந்த தொகுதியில் அமைச்சருக்கு எதிராகப் பொதுமக்கள் திரண்டதால் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

செவ்வாய் 16 மா 2021