மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

வாய்ப்பை மறுக்கும் பாஜகவினர்!

வாய்ப்பை மறுக்கும் பாஜகவினர்!

தேர்தலில் போட்டியிடவில்லை, ஓய்வு தேவை என நடிகர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.

கேரளா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 115ல் பாஜக போட்டியிடுகிறது. இதில் 112 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக மார்ச் 14ஆம் தேதி அறிவித்தது.

நடிகர் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 16) பேசியதாவது

"எனக்கு ஓய்வு தேவை. கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டு பிறகு பிரச்சாரத்தைத் தொடங்குவேன். அதற்காக நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நான் இன்னும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகவில்லை. எனக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் கட்சித் தலைமை என்னைக் கட்டாயப்படுத்திப் போட்டியிட விரும்பும் 4 தொகுதிகளைத் தேர்வு செய்யச் சொன்னது. நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடுவேன் என நினைத்து அவர்கள் பரிந்துரைக்கின்றனர். நான் திருச்சூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார், இப்போது வெற்றியை என்னால் கணிக்க முடியாது. இருப்பினும், பாஜக உறுப்பினராக நான் கட்சியின் முடிவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்"என்று கூறினார்.

முன்னாள் மஹிளா காங்கிரஸ் தலைவர் லத்திகா சுபாஷ் டிக்கெட் மறுக்கப்பட்ட பின்னர் அவரது கடுமையான போராட்டம் குறித்துப் பேசிய சுரேஷ் கோபி, "தலையில் முடி இல்லாத என் அம்மாவை நான் கடைசியாகப் பார்த்தேன், எனவே லத்திகாவைப் பார்த்தபோது நான் மிகவும் மோசமான சம்பவமாக உணர்ந்தேன்," என்று தெரிவித்தார்.

முன்னதாக பாஜக சார்பில், வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி தொகுதியின் வேட்பாளராக மணிகண்டன்(31) பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மறுத்துவிட்டார்.

கட்சி மேலிடத் தலைவர்களைத் தேடியலைந்து கொக்குபோல் காத்திருந்து தோ்தலில் போட்டியிடச் சீட்டு வாங்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் அதிலும் சீட்டு கிடைக்கவில்லை என்றால் கட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு மாற்றுக் காட்சிக்கு வேட்பாளராகத் தாவும் இன்றைய கால அரசியலில், கேரளத்தில் வாய்ப்பு கிடைத்தும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பாஜக பிரமுகர்கள் மறுத்துள்ளது பரபரப்பான சம்பவமாகியுள்ளது.

-சக்தி பரமசிவன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

செவ்வாய் 16 மா 2021