மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

பண்ருட்டி: சத்யாவை ஒதுக்கிய அதிமுக தலைமை: ஓங்கும் வேல்முருகன் நிலைமை!

பண்ருட்டி:  சத்யாவை ஒதுக்கிய அதிமுக  தலைமை: ஓங்கும் வேல்முருகன் நிலைமை!

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ,சத்யா பன்னீர்செல்வத்துக்கு சீட் கிடைக்காததால் அவரது ஆதரவாளர்களுடன் கட்சி பொறுப்பிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் 35.54% சதவீதம் வன்னியர் வாக்குகள், 34.99% சதவீதம் பட்டிலினத்தோர் வாக்குகள், 11.79 சதவீதம் இஸ்லாமியர் வாக்குகள், 3.99% கிறிஸ்தவர் வாக்குகளும், 14% சதவீதம் இதர வாக்குகள் இருக்கின்றன. வெற்றி கணக்குப் போட்டுப் பார்த்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் சீட்டு வாங்கி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத்தின் அரசியல் எதிரியான சத்யா பன்னீர்செல்வத்துக்கு சீட் கிடைக்காமல் செய்வதற்காக... ‘பண்ருட்டியில் வேல்முருகன் தான் நிற்பார். வேல்முருகனை நேருக்கு நேர் சந்திக்க நீங்களே நில்லுங்கள்’என்று பாமகவிடம் கூறி பண்ருட்டி தொகுதியைக் கேட்கவைத்தார். அமைச்சர் திட்டத்தை முறியடிக்க சத்யா பன்னீர்செல்வம் பாமக தலைமையை நேரடியாகத் தொடர்புகொண்டு, “வேல்முருகனை நான் தோற்கடித்துக்காட்டுகிறேன்” என்று பேசி பண்ருட்டி தொகுதியை அதிமுகவுக்கு உறுதிசெய்தார்.

இந்த முயற்சியை அறிந்த அமைச்சர் சம்பத் விடுவதாக இல்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர்- துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் நேரடியாக சந்தித்து, “சொரத்தூர் இராஜேந்திரனுக்கு பண்ருட்டி தொகுதியைக் கொடுத்தால் நான் வெற்றிபெறவைக்கிறேன்’ என்று உறுதி கொடுத்து தொகுதியைப் பெற்றுவிட்டார். இந்தப் பின்னணியில்தான் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அதிமுக மகளிர் அணி மாநில துணைத் தலைவருமான சத்யாவுக்கு சீட் கிடைக்காமல் போனது.

சத்யா அவரது கணவர் பன்னீர் இருவரிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஒபிஎஸ் இருவரும் சமாதானம் செய்துள்ளார்கள். இருந்தாலும் அரசியல் பாதுகாப்புக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் சத்யா. “இப்போது மாற்றமுடியாது, தேர்தல் பிறகு பரிசீலனை செய்வதாக” ஒபிஎஸ் கூறியுள்ளார். ஆனால் அதில் நம்பிக்கை ஏற்படாமல்தான் அரசியலை விட்டே ஒதுங்குவதாக முடிவெடுத்துள்ளனர் சத்யாவும் முன்னாள் பண்ருட்டி நகர்மன்ற தலைவரான அவரது கணவர் பன்னீரும்.

இன்று மார்ச் 16ஆம் தேதி, காலையில் பன்னீர் ஆதரவாளர்கள் அவரது வீட்டுக்கு முன்பு குவிந்தவர்கள் நாங்களும் கட்சி பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறோம் என்று ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பிவைத்தார்கள். அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் பாபு, பண்ருட்டி ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன், வார்டு செயலாளர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ராஜினாமா செய்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சொரத்தூர் இராஜேந்திரனும் சத்யா பன்னீரிடம் பேசியுள்ளார், அவர் பேச்சுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை என்கிறார்கள்.

சத்யா பன்னீர் பின்வாங்கியதால் அதிமுக வேட்பாளர் டென்ஷனில் இருப்பதாகச் சொல்கிறார்கள், திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் வேல்முருகனோ வேல் வேல் வெற்றி வேல் என்று தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

-வணங்காமுடி

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

செவ்வாய் 16 மா 2021