மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

அதிமுகவை தோற்கடிக்க கருணாஸ் சபதம் !

அதிமுகவை தோற்கடிக்க கருணாஸ் சபதம் !

2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை நடத்தி வரும் கருணாஸ், கேலி கிண்டலுக்கு செவி சாய்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

2021 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் வட்டாரத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி, அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய கருணாஸ் பின்னர் அந்த அறிவிப்பையும் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 16), 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நடைபெறவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்குத் துரோகம் இழைத்த அதிமுகவை நிராகரித்துத் தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. மாறாக 234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை, அதிமுக எதிர்ப்பு, உள்ளிட்டவை குறித்து சமூகவலைதளங்கள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடாத சூழலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும், இந்த அரசியல் வெற்றிடம் தரும் கேலி கிண்டல்களுக்குச் செவி சாய்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் கருணாஸ்.

மேலும், ” இந்த இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை வென்று எதிர்காலத்தில் சாதனைகளைப் படைப்போம் என்பதை நிர்வாகிகள், தொண்டர்களான உங்கள் மீது தலைமைக்கு முழு நம்பிக்கை இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

செவ்வாய் 16 மா 2021