மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

தஞ்சை செல்கிறாரா சசிகலா?

தஞ்சை செல்கிறாரா சசிகலா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுக் காலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகி, சென்னை தி நகர் வீட்டுக்கு வந்து ஐந்து வாரங்கள் கடந்துவிட்டது.

சசிகலாவால் அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்படும், அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சசிகலா பின்னால் போய்விடுவார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவிய நிலையில்தான் திடீரென்று மார்ச் 3 ஆம் தேதி, “அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து கொள்கிறேன்”என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டார் சசிகலா.

பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வழியில், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்ன சசிகலா ஒரு மாதத்துக்குள்ளாகவே தனது நிலைப்பாட்டை மாற்றியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியலிலிருந்து ஒதுங்கியவர் சென்னையில்தான் இருப்பாரா அல்லது தஞ்சாவூர் சென்று ஓய்வெடுப்பாரா என்ற பேச்சுகள் இருந்துவந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி திடீரென சென்னை தி.நகரில் இருக்கும் அகஸ்தியர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் சசிகலா.

இதேபோல தனது மன அமைதிக்காக மேலும் பல கோயில்களுக்கு செல்ல சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும், அதுவும் சென்னையில் இருந்து செல்ல வேண்டாம் என்பதால் தஞ்சையில் உள்ள வீட்டில் இருந்தபடியே சென்று வர முடிவெடுத்திருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் உறவுக்காரார் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க நேற்று மார்ச் 15ஆம் தேதி புறப்பட இருந்தவர், இன்று (மார்ச் 16) புறப்படத் தயாரா கிவருகிறார்.

தஞ்சையில் நடைபெறும் உறவுக்காரர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொண்டு கோடை முடியும் வரையில் தாய் மண்ணில் இருப்பதாக முடிவுசெய்துள்ளாராம் சசிகலா.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 16 மா 2021