மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

கண்ணீர்விட்ட புதுவை தலைவர்கள்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

கண்ணீர்விட்ட புதுவை தலைவர்கள்: எங்கே செல்லும் இந்தப் பாதை?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடியாமலேயே, கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக அவரவர்பாட்டுக்கு வேட்புமனு தாக்கல்செய்யத் தொடங்கிவிட்டனர்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, விசிக மூன்று கட்சிகளும் கூட்டணி உடன்பாட்டை முடித்துக்கொண்டு, வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

தே.ஜ.கூட்டணியில் பாஜக, அதிமுக, பாமக இடையே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், பாமக முன்னதாக தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி நேற்று தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்தார். இன்று ஏனாம் தொகுதிக்கு புறப்பட்டுச் சென்றுள்ள அவர், நாளை அங்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

அதிமுகவில் ஓம்சக்தி சேகர் நெல்லித்தோப்பு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதே தொகுதியில் கூட்டணிக் கட்சியான பாஜகவின் சார்பில் ஜான்குமாரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகியாக இருந்த ஏ.கே.டி.ஆறுமுகம் பாஜகவில் சேர்ந்து, இந்திரா நகர் தொகுதிக்காக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இப்படி ஒரு குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தன் ஆதரவாளர்களை நேற்று திடீரென அழைத்தார். வில்லியனூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், இந்த முறை தனக்கு தொகுதி சாதகமாக இல்லை என முடிவுக்கு வந்துள்ளார். இதை அவர்களிடம் சொல்லி இதனால் இந்தத் தொகுதியைவிட்டு மண்ணடிப்பட்டு தொகுதிக்குப் போவதாகக் கூறியதுடன், அதிகம் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டுள்ளார்.

மண்ணடிப்பட்டு தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.ஆக உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் டிபிஆர் செல்வம் மிரண்டுபோய் இருக்கிறார். கட்சித் தலைவர் ரங்கசாமி தன்னைக் கைவிட்டுவிட்டார்; தனக்காக தொகுதியை அவர் கேட்டு வாங்கவில்லை என தன் ஆதரவாளர்களைக் கூட்டி, அவரும் தன் பங்குக்கு கலங்கியபடி பேசியிருக்கிறார்.

புதுச்சேரி தே.ஜ. கூட்டணியில் இப்படி மாறிமாறி குழப்பம் நீடிக்கையில், அணியின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்குமோ என ஆதங்கப்படுகிறார்கள், கூட்டணி ஆதரவாளர்கள்.

- வணங்காமுடி

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 16 மா 2021