மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சீமான் இட்ட ரகசிய உத்தரவு!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு சீமான் இட்ட ரகசிய உத்தரவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. 117 ஆண் வேட்பாளர்களும், 117 பெண் வேட்பாளர்களும் சீமானின் பேச்சாற்றல், அவர் முன் வைக்கும் கொள்கை ஆவணம் ஆகியவற்றை முன் வைத்தே தேர்தலை சந்திக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1% வாக்குகள் பெற்ற நாம் தமிழர், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4%வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்...நாம் தமிழர் கட்சியின்வேட்பாளர்களை மற்ற கட்சிகள் உற்று கவனிக்கின்றன.

பரவலாகவே பெரிய கட்சி அல்லது பெரிய கூட்டணிகளில் இருந்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை தனியாக சந்தித்து ஒரு பெரிய விலையைக் கொடுத்து, ‘களத்தில் செயல்படாமல் இருங்கள்’என்று ஒரு பேரம் பேசப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ‘பேசாமல்’ இருந்தால் அந்த வாக்குகளை நாம் அடையலாமே என்பதுதான் அக்கட்சிகளின் திட்டம்.

இந்தத் தகவல் சீமான் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதையடுத்து அவர் வேட்பாளர்களுக்கு ரகசிய உத்தரவொன்றை இட்டுள்ளார்.

“நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், மக்களைச் சந்திப்பதும் வாக்குகள் சேகரிப்பது மட்டும் நோக்கம் அல்ல, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதை வீடியோ எடுங்கள், அதுபோன்ற ஆதாரங்களை உடனடியாக தலைமைக்கு அனுப்பி வையுங்கள் .

அதேபோல சிலர் நம்மையும் விலை பேச முயல்வார்கள். அப்படி உங்களிடம் யாராவது டீல் பேசினால் ஓர் இடத்துக்கு வரச் சொல்லுங்கள். நம்மிடம் அவர்கள் பேரம் பேசுவதை தம்பிகளை வைத்து வீடியோ எடுங்கள்.

வேட்பாளர்கள் மற்றும் நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் தொகுதிக்கு செல்லும்போது கையில் செல்போன் வைத்திருக்கவேண்டும். அதிகாரம் படைத்தவர்கள் அத்துமீறும்போதும் அடிக்க பாயும்போதும் அதை கேமராவுக்குள் கொள்முதல் செய்துவிடுங்கள். அதுவே நம் ஆயுதம்” என்பதுதான் சீமானின் ரகசிய உத்தரவு.

”நாங்கள் வைத்திருக்கும் கேமரா, யாருக்கு வைத்த குறி என்பது போகப்போகத்தான் தெரியும்” என்கிறார்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.

-வணங்காமுடி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 15 மா 2021