மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

வேட்பு மனு தாக்கல் செய்த ஸ்டாலின், துரைமுருகன்

வேட்பு மனு தாக்கல் செய்த ஸ்டாலின், துரைமுருகன்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று (மார்ச் 15) தாக்கல் செய்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 173 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இதில் அதிமுகவை எதிர்த்து நேரடியாக 130 தொகுதிகளில் திமுக களம் காண்கிறது. கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமை எதிர்த்து மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

இதனிடையே கடந்த 12 ஆம் தேதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது, ஆனால் அன்றைய தினம் முக்கிய நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாது என்பதாலும் இன்று மூன்றாம் பிறை மற்றும் முகூர்த்த நாள் என்பதாலும் வேட்பு மனு தாக்கல் செய்யப் பலரும் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று, அயனாவரம் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் தங்கவேலிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, திறந்த வெளி ஜீப்பில் சிறிது தூரம் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். ஸ்டாலின் வரும் போது சாலைகளின் இருபுறங்களிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் முக ஸ்டாலின் இன்று திருவாரூர் சென்று அங்குப் பிரசாரம் மேற்கொள்கிறார்.

முன்னதாக அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின் வேட்புமனு தாக்கல் செய்யப் புறப்பட்டார். கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஸ்டாலின். 2016 இல் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். தற்போது மூன்றாவது முறையாக அங்குப் போட்டியிடுகிறார்.

இதுபோன்று வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி.மோகன் ராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 15 மா 2021