மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

எத்தனை நாள்தான் காத்திருக்க முடியும்? டாக்டர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டி!

எத்தனை நாள்தான் காத்திருக்க முடியும்?  டாக்டர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டி!

வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுமென்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். இன்று (மார்ச் 15) சென்னையில் செய்தியாளர்களிடம் புதிய தமிழகம் கட்சியின் 60 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை வெளியிட்டார்.

கடந்த சில வருடங்களாகவே பாஜக ஆதரவுப் போக்குடன் கருத்துகளை வெளியிட்டுவந்த டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நாங்கள் அழைப்பே இல்லாமல் எத்தனை நாள் காத்திருக்க முடியும். தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் நீக்கம் குறித்து வலியுறுத்திவருகிறோம். அதுபற்றி விரிவான தேர்தல் அறிக்கை பிரச்சாரம்செய்வோம். தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். களத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், புதிய தமிழகம் தனித்துவத்தோடு இருக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல்பிரிவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. அதற்கு உள்ளே உள்ள விஷயம்தான் இந்தப் பொதுப் பெயர் கோரிக்கை.பட்டியல் வெளியேற்றம் என்பதற்கான உறுதியைக் கொடுத்தால் நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூட சொல்லியிருந்தேன். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதுபற்றி வெளிப்படையான ஆதரவை அவர்கள் கொடுக்கவில்லை.அதனால்தான் இந்த முடிவு” என்றார் டாக்டர் கிருஷ்ணசாமி.

இந்த பட்டியல்படி ஓட்டபிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.

கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடந்த தூத்துக்குடி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,

“ தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் பிற கட்சிகளுக்கு உழைத்தது போதும். இந்த சமூகத்தின் அடையாளம் புதிய தமிழகம் தான். ஓட்டப்பிடாரம் என்பதே புதிய தமிழகத்தின் பிறந்த மண். இது நம் கோட்டை. புதிய தமிழகம் மீண்டும் ஓட்டப்பிடாரத்தில் வரலாறு படைக்க வேண்டும். 96 வெற்றி மீண்டும் திரும்ப வேண்டும். நமது சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருந்து நமக்காக வேலை செய்தால் பிற சமுதாயத்தினரும் நமக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார்கள். எனவே தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துங்கள்”என்று பேசியிருந்தார். இந்த நிலையில்தான் இன்று (மார்ச் 15) தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 15 மா 2021