மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

மதச்சார்பின்மைக்கும் மதவாதத்திற்கும் இடையிலான போட்டி: திருமாவளவன்

மதச்சார்பின்மைக்கும் மதவாதத்திற்கும் இடையிலான போட்டி: திருமாவளவன்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், விசிக போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேற்று வெளியிட்டார். இன்று (மார்ச் 15) 6 வேட்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களை ஸ்டாலின் வாழ்த்தினார்.

இந்நிலையில் அண்ணா அறிவாலயம் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தல் இரு அணிகள், பதவி, அரசியல் அதிகாரத்துக்கான போட்டியல்ல. மதச்சார்புக்கும், மதச்சார்பின்மைக்கும் இடையேயான மக்கள் யுத்தம். சமூக நீதி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி களம் இறங்குகிறது.

இந்த மண்ணில், பெரியார், அண்ணா, அவர்களது கொள்கை வாரிசு கலைஞர் ஆகியோர் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்கிற வகையில் தமிழ் மண்ணை சமூக நீதி மண்ணாகப் பக்குவப்படுத்தியுள்ளார்கள். அதனால் தான் அரை நூற்றாண்டு காலமாக இங்குச் சாதி, மத வெறியர்களுக்கு அரசியல் களத்தில் காலூன்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது ஜெயலலிதாவும், கலைஞரும் இல்லை. இந்நிலையில், அதிமுகவைப் பயன்படுத்தி, சாதியவாத, மதவாத சக்திகள் காலூன்றிட வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது. பாஜகவும், அதனை இயக்கும் சங் பரிவார் அமைப்புகளும், கலைஞர் ஜெயலலிதா இல்லாத சூழலைப் பயன்படுத்தி ஒரு அரசியல் சக்தியாக பரிணாமம் பெற்றுவிட வேண்டும் என்று முயல்கின்றன.

அவர்களுக்கு இங்கு இடமில்லை என்று விரட்டியடிக்க, ஒரு யுத்தத்தை திமுக தலைமையிலான கூட்டணி நடத்த இருக்கிறது. 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய திருமாவளவன், “போலி வாக்குறுதி, இலவசங்கள் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்கள் எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் வீழ்வது உறுதி” என்றார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 15 மா 2021