மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

ஸ்டாலின் பறந்து பறந்து பிரச்சாரம்!

ஸ்டாலின் பறந்து பறந்து பிரச்சாரம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று (மார்ச் 15) மூன்றாம் பிறை நாளில் இருந்து துவக்குகிறார்.

வளர்பிறை நாளான இன்று மாலை 5.30க்கு திருவாரூர் தெற்கு வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார் ஸ்டாலின்.

இதுபோல நாளை 16ஆம் தேதி காலை 10 மணிக்கு அறந்தாங்கி, ஆலங்குடி தொகுதிகளுக்காக கீரமங்கலம், அறந்தாங்கி ஆகிய இடங்களில் பேசுகிறார். நாளை மாலை 6 மணிக்கு நாமக்க, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு தொகுதிகளுக்காக நாமக்கல் பூங்கா சாலையில் பேசுகிறார்.

17 ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் பேசும் ஸ்டாலின், அன்று மாலை தாம்பரம் பிரச்சாரக் கூட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

இதேபோல 18 ஆம் தேதி காலை கும்மிடிப்பூண்டி, மாலை சிவகங்கை திருப்பத்தூர் 18 ஆம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, அன்று மாலை திருப்பூர் மாநகரம் என்று பிரச்சாரப் பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறார்.

ஏற்கனவே மின்னம்பலத்தில் பிரச்சாரம்: ஜெ.பாணியில் ஸ்டாலின் என்ற தலைப்பில். “அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய நாட்கள் இல்லாததால் ஆங்காங்கே ஒரு சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றியுள்ள தொகுதி வேட்பாளர்களை அங்கே மேடையேற்றி ஜெயலலிதா பாணியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் ஸ்டாலின்” என்று எழுதிருந்தோம்.

அதுபோலவே ஸ்டாலினின் பிரச்சாரப் பயணம் அமைந்திருக்கிறது. ஸ்டாலினுக்காக தனி விமானம், ஹெலிகாப்டர் ஆகிய இரு பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது பயன்படுத்திய ஹெலிபேடுகளை ஸ்டாலினும் பயன்படுத்த இருக்கிறார்.

அதனால்தான், இன்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழகத் தலைவர் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு பிரச்சாரத்துக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி எக்காரணம் கொண்டு கழகத்தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம்”என்று கண்டிப்போடு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

திங்கள் 15 மா 2021