மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

தேமுதிகவுடன் கூட்டணி: தினகரனின் 'கோவில்பட்டி' கணக்கு!

தேமுதிகவுடன் கூட்டணி:  தினகரனின் 'கோவில்பட்டி' கணக்கு!

அமமுக - தேமுதிக கூட்டணி முடிவாகி, இக்கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக அங்கே போதிய எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியால் கடந்த வாரம் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில் அமமுக,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடத்தியது, ஆனால், மக்கள் நீதி மய்யத்துடனான கூட்டணிப் பேச்சு தொடங்குவதற்கு முன்பே முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுக் கருத்தின் அடிப்படையில் தேமுதிகவும், அமமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இதில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவனும், அமமுக சார்பில் டிடிவி தினகரன் சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான செந்தமிழனும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுகிறார். இந்த 60 தொகுதிகளிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்கள் திரும்ப பெறப்படுகிறார்கள் என்றும் அமமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமமுக வட்டாரத்தில் பேசுகையில், "இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் டிடிவி தினகரனோ, தேமுதிக சார்பில் பிரேமலதாவோ கையெழுத்திடவில்லை. தினகரன் கோவில்பட்டியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்றே புறப்பட்டதால் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 15 க்கு உட்பட்ட இடங்களே ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டி தொகுதியில் கணிசமான நாயுடு சமுதாய வாக்குகள் உள்ளன. கடம்பூர் ராஜூ, மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனுவாசன் ஆகியோர் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் அவ்வாக்குகள் பிரியக் கூடும். மேலும் கூட்டணியில் தேமுதிக இருந்தால் நாயுடு சமூக ஓட்டுகளிலும் கணிசமானவற்றை தினகரனுக்குக் கொண்டு வரலாம். அதன் மூலம் அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுக கூட்டணி வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரைத் தோற்கடிக்கலாம் என்று கருதுகிறது அமமுக. அதனால்தான் தினகரன் கோவில்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பே விரைவாகப் பேசி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். விரைவில் டிடிவி தினகரனுக்காக பிரேமலதா கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்வார்" என்கிறார்கள்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

திங்கள் 15 மா 2021